அரசு முறை பயணமாக அமெரிக்கா சென்றுள்ள துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வத்தை , ஹூஸ்டன் பல்கலைக்கழக வேந்தர் ரேணு கத்தார், ஹூஸ்டன் பெருநகர பார்ட்னர்ஷிப் சூசன் டேவன்போர்டு ஆகியோர் தனியார் ஓட்டலில் நேரில் சந்தித்தனர். அப்போது ஹூஸ்டன் பல்கலைக்கழக வேந்தர் ரேணு கத்தார் 'தமிழ் ஆய்வு இருக்கை அமைவதற்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்வதாக தெரிவித்தார்.
இது குறித்து துணை முதல்வர் பதிலளித்து பேசுகையில், தமிழ்நாடு திரும்பியவுடன் முதலமைச்சர் பழனிசாமியுடன் கலந்தாலோசித்து தமிழ் ஆய்வு இருக்கை அமைவதற்குத் தேவையான அனைத்து உதவிகளும் செய்யப்படும் எனத் தெரிவித்தார்.
மேலும், தமிழ்நாட்டுக்கும் டெக்சாஸ் மாகாணத்திற்கும் பல ஒற்றுமைகள் உள்ளன. ஆகவே இங்குள்ளவர்கள் தமிழ்நாட்டில் முதலீடு செய்வதற்குப் பல வாய்ப்புகள் உள்ளதாக நம்புகிறேன். எனவே இங்குள்ள தொழில்முனைவோர் குழு, முதலீடு செய்வது குறித்து ஆலோசனை நடத்த தமிழ்நாட்டிற்கு வரவேண்டும் என துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம் வேண்டுகோள் விடுத்தார்.
இதையும் படிங்க: 'தமிழ்நாட்டின் வளர்ச்சிப் பாதையில் அமெரிக்க தொழிலதிபர்கள் இணைய வேண்டும்' - துணை முதலமைச்சர் வேண்டுகோள்!