ETV Bharat / state

ஹோட்டல் ஷட்டரில் மின்சாரம் பாய்ந்து ஊழியர் பலி? - போலீசார் விசாரணை! - சென்னை செய்திகள்

சென்னையில் உணவகத்தில் வேலைக்கு சேர்ந்த இரண்டாவது நாளே ஊழியர மின்சாரம் தாக்கி உயிரிழந்ததாக புகார் எழுந்துள்ளது.

இரும்பு ஷட்டரில் பாய்ந்த மின்சாரம்
இரும்பு ஷட்டரில் பாய்ந்த மின்சாரம்
author img

By

Published : Nov 14, 2022, 11:27 AM IST

Updated : Nov 14, 2022, 12:29 PM IST

சென்னை: அரியலூர் மாவட்டத்தை சேர்ந்தவர் பாபு(27), தி.நகரில் உள்ள நாயர் சாலையில் அமைந்துள்ள தனியார் ஹோட்டலில் இரண்டு நாட்களுக்கு முன்பு சர்வராக பணிக்கு சேர்ந்து பணியாற்றி வந்தார்.

இந்த நிலையில் நேற்று பாபு ஹோட்டலில் சாப்பிட வந்த நபர்களுக்கு உணவு வழங்கும் பணியில் ஈடுபட்டு வந்தார். அப்போது அப்பளம் காலியானதால், பாபு இரும்பு ஷட்டர் மீது கை வைத்து அப்பளம் பக்கெட்டை எடுக்க முயன்ற போது, திடீரென இரும்பு ஷட்டரில் இருந்து மின்சாரம் பாய்ந்ததில் அவர் மயங்கி கீழே விழுந்துள்ளார்.

இதனை கண்ட சக ஊழியர்கள் பாபுவை மீட்டு சைதாப்பேட்டையில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு பாபுவை பரிசோதித்த மருத்துவர்கள் பாபு ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். அதன்பேரில் பாண்டி பஜார் போலீசார் உயிரிழந்த பாபுவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதனிடையே, போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், ஊழியர் பாபு கதவு அருகே இருந்த அப்பளத்தை எடுக்க முயன்ற போது இரும்பு ஷட்டரின் கதவு இடுக்கில் கட்டை விரல் மாட்டிக்கொண்டதில் நிலைத்தடுமாறி கீழே விழுந்ததில் தலையில் அடிப்பட்டு உயிரிழந்தது தெரியவந்துள்ளது. ஆனாலும், பாபுவின் உறவினர்கள் மின்சாரம் தாக்கியதாலேயே உயிரிழந்துள்ளதாக குற்றம்சாட்டியுள்ளனர்.பிரேத பரிசோதனைக்கு பின்னரே மரணத்திற்கான காரணம் தெரியவரும்.

இதையும் படிங்க: தூத்துக்குடியில் பயங்கரம் : வி.சி.க. பிரமுகர் ஓட ஓட வெட்டிக் கொலை..

Last Updated : Nov 14, 2022, 12:29 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.