யஷ் நடிப்பில் அண்மையில் வெளியான கேஜிஎஃப் இரண்டாம் பாகம் உலகம் முழுவதும் வசூலை வாரிக் குவித்து வருகிறது. இப்படம் தமிழ்நாட்டில் இன்று வரை பாக்ஸ் ஆபிஸ் ஹிட் அடித்து வருகிறது. கேஜிஎஃப் படத்தின் இரண்டு பாகங்களையும் ஹோம்பலே பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
இந்நிலையில் இந்நிறுவனம் இன்று (ஏப்ரல் 21) புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் தாங்கள் தயாரிக்கும் அடுத்த படத்தை சுதா கொங்கரா இயக்க உள்ளதாக அறிவித்துள்ளது. மேலும் இந்தப் படம் உண்மை சம்பவத்தை அடிப்படையாகக்கொண்டு உருவாக்கப்பட உள்ளதாகவும் தெரிவித்துள்ளது. இதையடுத்து, இந்தப்படத்தில் சூர்யா நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. பான் இந்தியா படமாக உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு தொடங்க உள்ளது.
முன்னதாக சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடித்த படம் 'சூரரைப் போற்று' மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று, பல விருதுகளை குவித்தது. படக்குழுவினருக்குப் பாராட்டுகளைப் பெற்றுத் தந்தது. இந்நிலையில் இந்த கூட்டணி மீண்டும் இணையுள்ளதாக கூறப்படுவது, அவர்களது ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் எனத் தெரிகிறது.
இதையும் படிங்க: சர்வதேச விருதுடன் "சூரரைப் போற்று" சூர்யா - வைரலாகும் வீடியோ!