ETV Bharat / state

ஹோலி பண்டிகையால் கலர்புல்லான சென்னை

author img

By

Published : Mar 8, 2023, 10:00 PM IST

சென்னையில் வடமாநிலத்தவர்கள் அதிகமாக வாழும் பகுதிகளில் இன்று ஹோலி பண்டிகை மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது.

ஹோலி பண்டிகையால் கலர்புல்லான சென்னை!
ஹோலி பண்டிகையால் கலர்புல்லான சென்னை!

சென்னையில் உள்ள சவுக்கார்பேட்டை, புரசைவாக்கம், பட்டாளம் மற்றும் பாரிமுனை ஆகிய பகுதிகளில் வடமாநிலத்தவர்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதிகளில் வருடந்தோறும் கொண்டாடப்படுவதை போல ஹோலி பண்டிகை இன்று (மார்ச் 8) வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.

ஹோலி பண்டிகை கிளிக்ஸ்
ஹோலி பண்டிகை கிளிக்ஸ்

அந்த வகையில், சென்னையில் உள்ள வடமாநிலத்தவர்கள் உள்பட பலரும் ஒருவருக்கொருவர் வண்ணப் பொடிகள் பூசி, உற்சாக நடனமாடியவாறு ஹோலி பண்டிகையை கோலாகலமாகக் கொண்டாடினர். இந்த பண்டிகையானது வடமாநிலத்தவர்கள் கொண்டாடும் பண்டிகைகளில் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

இந்து மதத்தினரின் பிரபலமான பண்டிகைகளில் ஒன்றான கோடை காலத்தை வரவேற்கும் நிகழ்வாக இந்த ஹோலி பண்டிகை அமைந்துள்ளது. இந்த பண்டிகை இந்தியா, நேபாளம், வங்கதேசம் போன்ற நாடுகளிலும் சுரிநாம், கயானா, தென்னாப்பிரிக்கா, திரினிதாத், இங்கிலாந்து, மொரீசியசு மற்றும் பிஜூ ஆகிய இந்து மக்கள் பரவலாக வாழும் நாடுகளிலும் கொண்டாடப்படுகிறது.

புராணம் கூறும் ஹோலி வரலாறு: இந்தியாவில் பஞ்சாப், உத்தரபிரதேசம், பீகார், மேற்கு வங்கம், ஒடிசா, குஜராத், மகாராஷ்டிரா, மணிப்பூர் மற்றும் காஷ்மீர் போன்ற மாநிலங்களில் ஹோலி பண்டிகை வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. இந்த பண்டிகையானது ‘வசந்த காலத் திருவிழா’ என்றும் அழைக்கப்படுகிறது.

ஹோலி பண்டிகை கிளிக்ஸ்
ஹோலி பண்டிகை கிளிக்ஸ்

இந்த ஹோலி பண்டிகை, குளிர் காலத்தின் இறுதியில், பங்குனி மாதத்தின் கடைசி முழு நிலவு நாளில் கொண்டாடப்படுகிறது. ஹோலியின் முக்கிய நாளில் மக்கள், ஒருவருக்கொருவர் வண்ணப் பொடிகளையோ அல்லது வண்ணம் கலந்த நீரையோ ஒருவர் மீது ஒருவர் வீசிக்கொண்டு கொண்டாடுகின்றனர். இந்த நாளுக்கு முன்னதாக பெரிய நெருப்புகளை எரிய வைப்பார்கள்.

இது ‘ஹோலி தகனம்’ என அழைக்கப்படுகிறது. புராணங்களின்படி, இரண்யகசிபுவின் சகோதரி அரக்கி ஹோலிகா, இளம் பிரகல்லாதனை நெருப்பில் போட முயன்றதாகவும், அப்போது அதிலிருந்து வியக்கத்தக்க வகையில் அவர் தப்பித்ததன் நினைவாக நெருப்புகள் மூட்டப்படுகின்றன எனவும், பிரகல்லாதன் தெய்வத்தன்மை வாய்ந்த மிகச் சிறந்த விஷ்ணு பக்தன் எனவும் கருதப்படுகிறது.

ஆனால் நீரை எடுத்து ஊற்றும்போது ஹோலிகா எரிந்ததாக புராணங்கள் கூறுகின்றன. தற்போது இந்த நாளைத்தான் ஹோலி பண்டிகையாக மக்கள் கொண்டாடி வருகின்றனர். மேலும் கடந்த சில நாட்களுக்கு முன்பு வடமாநிலத்தவர்கள் தமிழ்நாட்டில் தாக்கப்பட்டதாக சமூக வலைதளங்களில் வதந்தி பரவியது.

இதன் காரணமாக தமிழ்நாட்டில் வேலை செய்யும் வடமாநிலத்தவர்கள் பலரும் சொந்த ஊர்களுக்குச் செல்ல படையெடுத்தனர். அப்போது இந்த வதந்தி தொடர்பாக வடமாநிலத் தொழிலாளர்கள் யாரும் அச்சப்பட வேண்டாம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.

ஆனால், தாம்பரத்தில் இருந்து சொந்த ஊர்களுக்குச் சென்ற வடமாநிலத்தவர்கள், நாங்கள் ஹோலி பண்டிகை கொண்டாட சொந்த ஊருக்குச் செல்கிறோம் என்றும், வருடத்திற்கு ஒரு முறை 15 நாட்கள் ஹோலி பண்டிகைக்காக விடுமுறை எடுத்து, சொந்த ஊர் செல்வது வழக்கம் என்றும் கூறினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: ஹோலி பண்டிகை ஸ்பெஷல் ரெசிப்பி: "ஹரா பாரா கேபாப்"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.