ETV Bharat / state

இல்லம் தோறும் மூவர்ண கொடியை ஏற்றுங்கள்: பொதுமக்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி வேண்டுகோள் - சென்னை

இல்லம் தோறும் மூவர்ண கொடியை ஏற்றுங்கள் என பொதுமக்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இல்லம் தோறும் மூவர்ண கொடியை ஏற்றுங்கள்; தமிழக மக்களுக்கு கவர்னர் வேண்டுகோள்

author img

By

Published : Aug 8, 2022, 9:26 PM IST

சென்னை: ஆளுநர் மாளிகையில் இருந்து வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ”75 ஆண்டுகால சுதந்திரத்தையும், பெருமையையும் கொண்டாடும் இந்த ஆகஸ்ட் 15ம் தேதி நமக்கு மிகவும் சிறப்பு வாய்ந்தது. வளமான இந்தியாவுக்காக நமது மகத்தான சுதந்திரப் போராளிகள் செய்த தன்னலமற்ற சேவைகள் மற்றும் உயர்ந்த தியாகங்களுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. அவர்களின் உன்னத தியாகங்களுக்கு தேசம் என்றும் நன்றியுடன் இருக்கும். நமது மூவர்ண தேசியக்கொடி நமது சுதந்திரத்தை பிரதிபலிக்கிறது. இது நமது சுதந்திர போராட்ட வீரர்களின் ரத்தத்தினாலும் தியாகத்தினாலும் பிறந்தது.

வீரம் மிக்க நமது முன்னோர்களான புலித்தேவன், வீரன் அழகு முத்துக்கோன், வீரபாண்டிய கட்டபொம்மன், தீரன் சின்னமலை, வெண்ணிக்காளடி, ஒண்டிவீரன், முத்து குடும்பனார், சுந்தரலிங்கம், பெரிய காலடி, ஊமைத்துரை, கருப்ப சேர்வை மற்றும் ஆயிரக்கணக்கானோர் இக்கொடிக்காக உயிர் துறந்தனர்.

மேலும் வ.உ.சிதம்பரம் பிள்ளை, சுப்ரமணிய சிவா, வாஞ்சிநாதன், வா.வே.சு உட்பட ஏராளமான நம் முன்னோர்கள் இந்தக் கொடிக்காகச் சொல்லொணாத் துன்பங்களைச் சந்தித்தவர்வர்கள். நீலகண்ட பிரம்மச்சாரி , திருப்பூர் குமரன், மகாகவி சுப்பிரமணிய பாரதியார், பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் உள்ளிட்டோரும் பெரும் இன்னல்களை சந்தித்து இந்த கொடிக்காக பாடுபட்டனர்.

காஷ்மீர் முதல் கன்னியாகுமரி மற்றும் கட்ச் முதல் கோஹிமா வரை - நமது நாட்டின் நீளம் மற்றும் அகலம் முழுவதிலும், ஆகஸ்ட் 13 முதல் 15 வரை ஒவ்வொரு வீட்டு மாடியிலும் நமது தேசியக் கொடியை பெருமையுடன் ஏற்றி, அந்த துணிச்சலான சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு நமது நன்றியைத் தெரிவிக்க நமது நாடு முடிவு செய்துள்ளது.

நமது சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு நன்றி தெரிவிக்கும் இந்தப் பிரச்சாரம் 'ஹர் கர் திரங்கா', "இல்லம் தோறும் மூவர்ண கோடி' என்று அழைக்கப்படுகிறது. இந்தச் சந்தர்ப்பத்தில், நமது பிரதமர் நரேந்திர மோடியின் பேச்சை நினைவுபடுத்த விரும்புகிறேன். "இதுவே நேரம் , சரியான நேரம், பாரதத்தின் பொன்னான நேரம், எண்ணற்ற கரங்களின் ஆற்றல் இங்கு உள்ளது.

எங்கும் நாட்டுப்பற்று பரவியுள்ளது. நீங்கள் எழுந்து நின்று மூவர்ணக்கொடியை அசையுங்கள், பாரதத்தை ஒளிமயமாக்குங்கள். இதுவே நேரம், சரியான நேரம், பாரதத்தின் பொன்னான நேரம், உங்களால் சாதிக்க முடியாது என்று எதுவுமில்லை, நீங்கள் எழுந்து உழைக்கத் தொடங்குங்கள். உங்கள் திறனை அறிந்து கொள்ளுங்கள், உங்கள் கடமையை உணருங்கள், இதுவே பாரதத்தின் பொன்னான நேரம், இதுவே நேரம், சரியான நேரம்," என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: தமிழ்நாட்டில் எல்லாம் அரசியலாக்கப்படுகிறது - ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.