சென்னை பல்லாவரம் அடுத்த அனகாபுத்தூர் காமராஜபுரத்தில் கிரஷர் ஒன்று இயங்கிவருகின்றது. அந்தக் கிரஷர் உரிமையாளரிடம் ஒருவர் நேரில் சென்று பணம் கேட்டுள்ளார். பணம் கொடுக்கவில்லை என்றால் கொலை செய்துவிடுவதாகவும் மிரட்டல் விடுத்துள்ளார்.
கிரஷர் உரிமையாளர் பணம் தர மறுத்ததால், மிரட்டல் விடுத்த நபர் கிரஷர் மண்ணில் கலப்படம் செய்வதாக மாசுகட்டுப்பாடு வாரியத்துக்கும், செங்கல்பட்டு ஆட்சியர் அலுவலகத்துக்கும் பொய்யான தகவலைத் தெரிவித்துள்ளார்.
இதை அறிந்த கிரஷர் உரிமையாளர் இது குறித்து சங்கர் நகர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் கொலை மிரட்டல் விடுத்தவர் பம்மல் பகுதியைச் சேர்ந்த சதாம் உசேன் (28) எனவும் இவர் மீது சங்கர் நகர் காவல் நிலையத்தில் சரித்திரப் பதிவேடு குற்றவாளி எனத் தெரியவந்தது.
அதையடுத்து சதாம் உசேன் கிரஷர் உரிமையாளரை கொலை மிரட்டல் விடுத்ததாக அவரை கைதுசெய்து நீதிபதி முன் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: நீட் வேண்டாம்: நாடாளுமன்றத்தில் பதாகைகள் ஏந்தி திமுக எம்.பி.க்கள் போராட்டம்