சென்னை காவல் ஆணையர் அலுவலகத்திற்கு ஆன்லைன் மூலமாக இந்து மக்கள் முன்னணி அமைப்பின் சார்பாக விஜய்சேதுபதி மீது புகார் ஒன்றை அளித்துள்ளனர்.
அந்தப் புகாரில், “நடிகர் விஜய்சேதுபதி தனியார் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகும் 'நம்ம ஊரு ஹீரோ' என்ற நிகழ்ச்சியில் தொகுப்பாளராக இருந்து வந்தார். அப்போது அந்த நிகழ்ச்சி ஒன்றில் இந்து மத கடவுளை மிகவும் இழிவுப்படுத்தும் வகையில் பேசிய வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.
இவர் தொடர்ந்து இந்து மத கடவுளை விளம்பரத்திற்காக இழிவுப்படுத்தி பேசி வருவது கண்டிக்கத்தக்கது. இவரது பேச்சு பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் இருக்கிறது. இதனால் இந்து மத கடவுளை பற்றி அவதூறாக பேசி வரும் விஜய்சேதுபதி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என குறிப்பிடப்பட்டுள்ளது.