ETV Bharat / state

கர்நாடகத் தேர்தலில் இந்து மக்களே பாஜகவை வெறுத்திருப்பார்கள் - திருமாவளவன் பேச்சு - Thirumavalavan fire on bjp

''கர்நாடகத் தேர்தலில் பாஜக சிறுபான்மை மக்கள் எங்களுக்குத் தேவையில்லை, பெரும்பான்மை மக்கள் மட்டும்போதும் என்று இருந்த நிலையில் மதம் சார்ந்து பாஜக போட்ட கணக்குத் தவறான கணக்கு ஆகிவிட்டது. இந்து மக்களே பாஜகவை வெறுத்திருப்பார்கள்'' என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : May 13, 2023, 9:59 PM IST

சென்னை: சென்னை அசோக் நகரில் உள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைமை அலுவலகத்தில் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.

அப்போது பேசிய அவர், "விசிகவில் மறுசீரமைப்பு நடவடிக்கை நடந்து வரும் நிலையில் 38 மாவட்டங்களில் வருவாய் மாவட்டங்களை 100 மாவட்டங்களாகப் பிடித்துள்ளோம். இதில் கட்சியில் உள்ள பெண்களுக்கு 10 சதவீதம் இட ஒதுக்கீடு செய்து 10 மாவட்டங்களில் 10 பெண்களை மாவட்டச் செயலாளராக அறிவிக்க உள்ளோம். கர்நாடகத்தில் பாஜகவை மக்கள் விரட்டி அடித்துள்ளார்கள். பாஜக சிறுபான்மை மக்கள், எங்களுக்குத் தேவையில்லை; பெரும்பான்மை மக்கள் மட்டும் போதும் என்று இருந்த நிலையில் மதம் சார்ந்து பாஜக போட்ட கணக்குத் தவறான கணக்கு ஆகிவிட்டது. இந்து மக்களே பாஜகவை வெறுத்திருப்பார்கள்.

மேலும் கடந்த முறை பாஜக வெற்றி பெற்ற தொகுதிகளில் 30 தொகுதிகளை இந்த முறை இழந்துள்ளது. இதன் மூலம் இந்துக்களே 30 இடங்களில் பாஜவை கைவிட்டுள்ளனர். அதேபோல் சங் பரிவார கும்பலின் வெறுப்பு அரசியல் எடுபடவில்லை. அவர்களின் வெறுப்பு அரசியலை கைவிட வேண்டும்.

மேலும் விசிக சார்பில் காங்கிரசிற்கு ஆதரவாக கர்நாடகாவில் தான் பிரசாரம் செய்யும்போது தென்னிந்தியாவில் கர்நாடக வழியாக பாஜக ஊடுருவி மற்ற மாநிலங்களை கைப்பற்ற நினைக்கிறது. அதை நிறைவேற்றக்கூடாது என்றும், புதுதில்லியில் ஆட்சி மாற்றம் ஏற்படுத்தும் முன்பாகவே கர்நாடகவில் ஆட்சி மாற்றம் ஏற்படுத்த வேண்டும் என்றும் பிரசாரம் செய்தேன். அது தற்போது நடந்துள்ளது. கொல்லைப் புறமாக ஆட்சியைப் பிடிக்க பாஜக முயலும். இதற்கு காங்கிரஸ் எம்எல்ஏக்கள் இடம் கொடுக்கக்கூடாது. கர்நாடக எம்.எல்.ஏக்கள் கட்டுக்கோப்புடன் ஒற்றுமையாக இருக்க வேண்டும்.

இந்து அரசியலை; இந்து மக்களே விரும்பவில்லை. ஜேடிஎஸ் தான் பாஜகவை வலுப்படுத்தவும், காங்கிரஸை பலவீனம் அடையவும் உதவுகிறது. இதுபோன்ற நிலையில் தான், பல மாநிலங்களில் மாநிலக் கட்சிகள் காங்கிரஸை பலவீனப்படுத்தவும் உதவுகிறது. மேலும் கர்நாடகத்தில் இந்த தேர்தலில் ஜேடிஎஸ் காங்கிரஸூடன் இணைந்திருந்தால், பாஜகவை வேரோடு தூக்கி எரிந்திருக்கலாம்.

thirumavalavan fire on hindu people
கர்நாடகத் தேர்தலில் இந்து மக்களே பாஜகவை வெறுத்திருப்பார்கள் - திருமாவளவன் பேச்சு
தமிழ்நாட்டில் 2024-ல் பாஜக, அதிமுக தோளில் ஏறி சவாரி செய்யப் பார்க்கிறது. இதனை அதிமுக புரிந்துகொள்ள வேண்டும். பாஜகவால் அதிமுகவுக்குப் பயன் கிடையாது. பாஜக - அதிமுக கூட்டணி இருந்தால் எடப்பாடி பழனிசாமி மற்றும் சிலர் மட்டுமே வெற்றி பெற முடியும். கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி ஆட்சியைப் பிடிக்கும் நிலையில், யார் முதலமைச்சர் என்பது போட்டி இருக்கும். ஆனால், இது தொடர்பாக தேசிய தலைமை தான் முடிவு எடுக்கும். இதில் பாஜகவுக்கு அந்த வாய்ப்பையும் கொடுக்கக் கூடாது. இந்த தேர்தல் முடிவு வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பயனளிக்கும்.

கர்நாடகத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி 40 முறை வந்தார். உள்துறை அமைச்சர் அமித்ஷா 20 முறை வந்தார். பாஜக தலைவர் நட்டா வந்தார். இந்த தேர்தலை பாஜகவே நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னோட்டமாகப் பார்க்கலாம்.
கர்நாடகாவில் காலூன்ற முடியும் என்ற இடத்திலேயே மக்கள் அவர்களை புறக்கணித்தார்கள். அப்படி என்றால் தமிழ்நாட்டில் எவ்வாறு இருக்கும் என்பது இந்த தேர்தல் மூலம் தெரிய வரும்" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: "வெறுப்பு அரசியலை தோற்கடித்த கர்நாடக மக்களுக்கு நன்றி" - ராகுல் காந்தி!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.