ETV Bharat / state

அத்திவரதரை தரிசிக்கும் பக்தர்களுக்கு வசதி தேவை - இந்து முன்னணி கோரிக்கை - இந்து முன்னணி

சென்னை: அத்திவரதரை தரிசிக்கவரும் பக்தர்களுக்கு அடிப்படை வசதிகள் செய்துகொடுக்க வேண்டும் என இந்து முன்னணி நிறுவன அமைப்பாளர் ராமகோபாலன் தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

hindu munnani
author img

By

Published : Jul 14, 2019, 5:10 PM IST

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”வரலாற்று சிறப்புமிக்க அத்திவரதர் தரிசன நிகழ்ச்சியில் வேண்டிய ஏற்பாடுகளை செய்ய தமிழ்நாடு முதல்வர் தனி கவனம் செலுத்திட வேண்டுகிறோம். நாற்பது ஆண்டுகளுக்கு ஒருமுறை பக்தர்களுக்கு தரிசனம் அளிக்கும் அத்திவரதரை காண சாதாரண பொதுமக்கள், பல முக்கிய பிரமுகர்கள் வந்த வண்ணம் உள்ளனர்.

அதன்படி ஜூலை 1ஆம் தேதி முதல் தற்போது வரை பல லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்துள்ளார்கள். ஆனால் அத்திவரதரை தரிசிக்க காஞ்சிபுரம் வரும் பக்தர்களுக்கு அவசியமான வசதிகள் செய்து தருவதில் குறைபாடு உள்ளது. இதுபோல, கடந்த வருடம் உத்தரப்பிரதேச மாநிலத்தில் கும்பமேளா நடைபெற்றபோது அந்த மாநில அரசு மிகச் சிறந்த ஏற்பாடுகளை செய்திருந்தது. அங்கு ஏற்பாடு செய்த அதிகாரிகளிடம் ஆலோசனை கேட்டு, அதிவிரைவாக இங்கும் அதுபோன்ற ஏற்பாடுகளை செய்யலாம்.

எனவே, குடிநீர் வசதி, தேவையான அளவிற்கு மொபைல் டாய்லெட் வசதி, பந்தல் ஆகியவற்றை அமைக்க வேண்டும். வரிசையில் நிற்பவர்கள் பசியாறிட, பிஸ்கெட் போன்ற சிறு உணவுகள் விற்பனைக்கு ஏற்பாடு செய்யலாம். அல்லது சேவை நிறுவனங்கள் மூலம் பிரசாதமாக விநியோகம் செய்யச் சொல்லலாம்.

சபரிமலை ஐயப்பன் கோயிலில் உள்ளதுபோல் மூன்று வரிசையாக தரிசிக்க ஏற்பாடு செய்தால், காலதாமதம் வெகுவாக குறையும். முதியோர்கள், கைக் குழந்தையோடு வருபவர்கள், கர்ப்பிணி பெண்கள் ஆகியோர் செல்வதற்கான பேட்டரி கார் வசதி, அழைத்து செல்ல தன்னார்வ தொண்டர்களையும் ஏற்பாடு செய்ய வேண்டும். வயதானவர்கள், நோயாளிகள் உள்ளிட்டோருக்கு ஏற்படும் உடல்நலக் குறைவை சமாளிக்க மருத்துவர்கள் குழுவை ஏற்பாடு செய்யவேண்டும்.

இவை தவிர, ஒரு குழு அமைத்து, அவ்வவ்போது ஏற்படும் குறைபாடுகளை களைந்து, சிறப்பான ஏற்பாடுகளை செய்துதந்து, அத்தி வரதரின் பேரருளையும், தமிழ்நாடு மக்களின் அன்பையும் தாங்கள் பெற்றிட வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்” என கூறப்பட்டுள்ளது.

Intro:nullBody:ச.சிந்தலைபெருமாள், செய்தியாளர்
சென்னை - 14.07.19

அத்திவரதரை காணவரும் பக்தர்களுக்கு அடிப்படை வசதிகள் செய்துகொடுக்க வேண்டும் ; ராமகோபாலன் தமிழக அரசுக்கு கோரிக்கை...

இந்து முன்னணியின் நிறுவன அமைப்பாளர் ராமகோபாலன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
வரலாற்று சிறப்புமிக்க அத்தி வரதர் தரிசன நிகழ்ச்சியில் வேண்டிய ஏற்பாடுகளை செய்ய தமிழக முதல்வர் தனிகவனம் செலுத்திட வேண்டுகிறோம்..
நாற்பது ஆண்டுகளுக்கு ஒரு முறை பக்தர்களுக்கு தரிசனம் கொடுக்கிறார் அத்தி வரதர். அவரை தரிசிக்க சாதாரண பொது மக்கள் முதல் பாரதத்தின் முதல் குடிமகன் வரை பல முக்கிய பிரமுகர்களும் வந்த வண்ணம் இருக்கிறார்கள். 
ஒவ்வொரு நாளும் பக்தர்கள் எண்ணிக்கை அதிகமாகி வருகிறது. தினசரி சுமார் ஒரு லட்சத்தைத் தாண்டுகிறது, கடந்த ஜூலை 1ஆம் தேதி முதல் இதுவரை பல லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்துள்ளார்கள்.

இதுபோல, கடந்த வருடம் உத்திர பிரதேச மாநிலத்தில் கும்பமேளா நடைபெற்றது. மிகச் சிறந்த ஏற்பாடுகளை அந்த மாநில அரசு செய்திருந்ததை கண்ணாரக் கண்டோம். அங்கு ஏற்பாடு செய்த அதிகாரிகளிடம் ஆலோசனை கேட்டு, அதிவிரைவாக இங்கும் அதுபோன்ற ஏற்பாடுகளை செய்யலாம்.
அத்தி வரதரை தரிசிக்க காஞ்சிபுரம் வரும் பக்தர்களுக்கு அவசியமான வசதிகள் செய்து தருவதில் குறைபாடு உள்ளது என்பதை தமிழக முதல்வரின் கவனத்திற்குத் தெரிவித்துக்கொள்கிறோம்.

எனவே,

1. தேவையான அளவிற்கு மொபைல் டாய்லெட் வசதி, மற்றும் அங்காங்கே குடிநீர் வசதி செய்து தர வேண்டும். வரிசையில் நிற்பவர்களுக்கு குடிநீர் தர ஏற்பாடு. (வெயிலின் தாக்கம் அதிகம் இருக்கிறது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.)

2. தரிசனத்திற்கு நிற்பவர்களுக்கும், ஆங்காங்கே நிற்பவர்களுக்கும் தேவையான பந்தல் அமைக்க வேண்டும். வெயிலின் தாக்கத்தால் பலர் மயக்கமடைகிறார்கள்.

3. வரிசையில் நிற்பவர்கள் பசியாறிட, பிஸ்கெட் போன்ற சிறு உணவுகள் விற்பனைக்காவது ஏற்பாடு செய்யலாம். அல்லது சேவை நிறுவனங்கள் மூலம் பிரசாதமாக வினியோகம் செய்யச் சொல்லலாம்.

4. தரிசன வரிசையில் போய்,  கோயில் உள் வரிசை வரும்போது, சபரிமலை ஐயப்பன் கோயிலில் உள்ளதுபோல மூன்று வரிசையாக தரிசிக்க ஏற்பாடு செய்தால், காலதாமதம் வெகுவாக குறையும், விரைவாக, அதிகமான பக்தர்கள் தரிசிக்க வசதி ஏற்படும்.

5. மருத்துவர்கள் குழுவை ஏற்பாடு செய்தும்,  வயதானவர்கள், உடல்நிலை பாதிக்கப்பட்ால் உடனே மருத்துவமனைக்கு அழைத்து செல்ல  அந்தந்த பகுதிகளில் ஆம்புலன்ஸ் வசதியும் அவசியம்.

6. வயதானவர்கள், நோயாளிகள் தரிசினம் செய்ய வேண்டும் என்ற பக்தியில் வருகிறார்கள். அவர்களுக்கும், கைக்குழந்தையோடு வருபவர்களுக்கும், கர்ப்பிணி பெண்களுக்கும் உடனடியாக செல்வதற்கான பேட்டரி கார் வசதி, அழைத்து செல்ல தன்னார்வ தொண்டர்களையும் ஏற்பாடு செய்ய வேண்டும். மேலும் வரவதற்கும், போவதற்கும் ஏற்பாடு தேவையான அளவில் இருப்பது அவசியம்.

7. தன்னார்வ தொண்டர்களை இணைத்து முழு சேவைக்கான ஏற்பாடு செய்ய வேண்டுகிறோம்.

இவை தவிர, ஒரு குழு அமைத்து, அவ்வவ்போது ஏற்படும் குறைபாடுகளை களைந்து, சிறப்பான ஏற்பாடுகளை செய்துதந்து, அத்தி வரதரின் பேரருளையும், தமிழக மக்களின் அன்பையும் தாங்கள் பெற்றிட வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன் எனத் தெரிவித்துள்ளார்..

Conclusion:null
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.