'ராமநாதபுரம் பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் மீது கொலை வெறி தாக்குதல் நடத்தியது, அதிமுக எம்.எல்.ஏ வேட்பாளர்கள் தேர்தல் பரப்புரை செய்யவிடாமல் வன்முறையில் ஈடுபடுவது, திமுக வேட்பாளர் தயாநிதி மாறனுக்கு ஆதரவாக பரப்புரையில் ஈடுபட்டவர்கள் மீது பெட்ரோல் குண்டு வீசி தாக்கியது உள்ளிட்ட பல்வேறு வன்முறை சம்பவங்களில் இந்திய சமூக ஜனநாயகக் (எஸ்.டி.பி.ஐ) கட்சியினர் ஈடுபட்டு ஜனநாயகத்திற்கு அச்சுறுத்தலாக உள்ளனர். எனவே, அக்கட்சியினை தடை செய்ய வேண்டும்' என இந்து மக்கள் கட்சியின் சார்பில் தலைமை தேர்தல் அதிகாரியிடம் புகார் மனு கொடுக்கப்பட்டுள்ளது.
எஸ்.டி.பி.ஐ கட்சியை தடைசெய்ய வேண்டும் - இந்து மக்கள் கட்சி
சென்னை: தேர்தல் சமயத்தில் தமிழ்நாட்டில் தொடர்ந்து வன்முறையை கட்டவிழ்த்து விடும் எஸ்.டி.பி.ஐ கட்சியை தடை செய்யக் கோரி இந்து மக்கள் கட்சி, தலைமை தேர்தல் அதிகாரியிடம் புகார் அளித்துள்ளனர்.