நீண்ட நெடுங்காலமாகவே தமிழ்நாட்டில் ஹிந்தி திணிப்புக்கு எதிரான குரல் ஒழித்துக்கொண்டிருக்கிறது. ஹிந்தி தெரியாததால் கனிமொழிக்கு நடந்ததுபோல் டெல்லி விமான நிலையத்தில் தனக்கும் நடந்தது என இயக்குநர் வெற்றிமாறன் அண்மையில் தனியார் ஊடகத்தில் வெளியான பேட்டியில் தெரிவித்திருந்தார். இது, சமூக வலைதளங்களில் பரவலாகப் பகிரப்பட்டது. வெற்றிமாறன் பகிர்ந்த அந்தச் சம்பவம் பலரையும் கொதிப்படையச் செய்தது.
-
👍🏼👍🏼👍🏼 https://t.co/DhwrfJK1ca
— Raja yuvan (@thisisysr) September 5, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">👍🏼👍🏼👍🏼 https://t.co/DhwrfJK1ca
— Raja yuvan (@thisisysr) September 5, 2020👍🏼👍🏼👍🏼 https://t.co/DhwrfJK1ca
— Raja yuvan (@thisisysr) September 5, 2020
இந்தச்சூழ்நிலையில், 'மெட்ரோ' திரைப்படத்தில் நடித்த நடிகர் சிருஷ் என்பவர் யுவன் சங்கர் ராஜாவுடன் இருக்கும் புகைப்படத்தை நேற்று (செப்.05) ட்விட்டரில் பதிவிட்டிருந்தார். அதை யுவன் சங்கர் ராஜாவும் பகிர்ந்தார். அவர்கள் இருவரும் அணிந்திருந்த டி- சர்ட்டில் 'ஹிந்தி தெரியாது போடா' என்ற வாசகமும்; 'நான் தமிழ்பேசும் இந்தியன்' என்ற வாசகமும் இடம்பெற்றிருந்தது.
இந்தப்புகைப்படம் நேற்றிரவு(செப் 5) முதல் அதிகபேரால் பகிரப்பட்டு வந்த நிலையில், இன்று ட்விட்டரில் 'ஹிந்தி தெரியாது போடா' என்ற ஹேஷ்டேக் ட்ரெண்டாகியுள்ளது. இந்நிலையில் இதனை திமுக மக்களவை உறுப்பினர் கனிமொழி ரீ ட்வீட் செய்தார். அதற்கு உடனடியாக நன்றி தெரிவித்து ரீ ட்வீட் செய்த யுவன், 'உண்மையில் நீங்கள் இனிமையானவர். நன்றி' எனத் தெரிவித்தார்.
-
Really sweet of you.... thank you so much :) https://t.co/FGntbAHkRT
— Raja yuvan (@thisisysr) September 5, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Really sweet of you.... thank you so much :) https://t.co/FGntbAHkRT
— Raja yuvan (@thisisysr) September 5, 2020Really sweet of you.... thank you so much :) https://t.co/FGntbAHkRT
— Raja yuvan (@thisisysr) September 5, 2020
-
Back to தொழில் .... something interesting on the work front 😉 #KeepCalm #SpreadLove @KikiVijay #WithLoveShanthnuKiki pic.twitter.com/vg9Vx6Hy4S
— Shanthnu 🌟 ஷாந்தனு Buddy (@imKBRshanthnu) September 5, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Back to தொழில் .... something interesting on the work front 😉 #KeepCalm #SpreadLove @KikiVijay #WithLoveShanthnuKiki pic.twitter.com/vg9Vx6Hy4S
— Shanthnu 🌟 ஷாந்தனு Buddy (@imKBRshanthnu) September 5, 2020Back to தொழில் .... something interesting on the work front 😉 #KeepCalm #SpreadLove @KikiVijay #WithLoveShanthnuKiki pic.twitter.com/vg9Vx6Hy4S
— Shanthnu 🌟 ஷாந்தனு Buddy (@imKBRshanthnu) September 5, 2020
அதேபோல் நடிகர் சாந்தனு பாக்யராஜூம் அவரது மனைவியும் தொகுப்பாளினியுமான கீர்த்தனாவும் 'ஹிந்தி தெரியாது போடா' என்ற வாசகமும்; 'நான் தமிழ்பேசும் இந்தியன்' என்ற வாசகமும் அடங்கிய டி-சர்ட்களை அணிந்து செல்ஃபி எடுத்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளனர்.
இதையும் படிங்க: I am a தமிழ் பேசும் இந்தியன்’ - சமூக வலைதளத்தில் பட்டைய கிளப்பும் யுவனின் புதிய அவதாரம்