நாடு முழுவதும் கடந்த மே 25ஆம் தேதியிலிருந்து உள்நாட்டு விமான சேவைகள் தொடங்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து, சென்னை விமான நிலையத்திலும் அரசின் கட்டுபாடுகள், விதிமுறைகளைப் பின்பற்றி உள்நாட்டு சேவைகள் தொடங்கப்பட்டு விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
அந்த வகையில், கடந்த 17 நாள்களில் சென்னை வந்தடைந்த 23 ஆயிரத்து 914 பயணிகளில், 12 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இவா்கள் சுகாதாரத் துறையினரால் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில், நேற்று ஒரே நாளில் சென்னை விமான நிலையம் வந்த ஆறு பயணிகளுக்கு கரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட பயணிகளின் எண்ணிக்கை 12இலிருந்து 18ஆக உயா்ந்துள்ளது.
அதேபோல் சென்னை சா்வதேச விமான நிலையத்திற்கு கடந்த ஜூன் எட்டாம் தேதி துபாயிலிருந்து சிறப்பு விமானம் மூலம் வந்த பயணிகள் மூன்று பேர், ஜூன் ஏழாம் தேதி மஸ்கட்டிலிருந்து வந்த ஒருவர், தமாமிலிருந்து வந்த ஒருவர் என மொத்தம் ஐந்து பயணிகளுக்கு இதுவரை கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: போலி பாஸ்போர்ட்டில் இந்தியா வந்த வங்கதேசப் பயணி: தொடரும் விசாரணை