சென்னை: அரக்கோணத்தை சேர்ந்த எம்.வேலு என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், ”அரக்கோணம் மங்கம்மா பேட்டை பகுதியில் அதிவேக போக்குவரத்தால் ஏற்படும் விபத்து, மரணங்களை தடுக்கும் வகையில் தேசிய நெடுஞ்சாலையின் குறுக்கே வேகத்தடைகள் அமைக்க உத்தரவிட வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.
இந்த மனு தலைமை நீதிபதி சஞ்ஜீப் பானர்ஜி, நீதிபதி ஆதிகேசவலு அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், ஏன் வேகத்தடை அமைக்க வேண்டும்? அதற்கான அவசியம் என்ன என மனுதாரர் விளக்க வேண்டும்.
மனுதாரர் தன்னுடைய கோரிக்கை மனுவை நெடுஞ்சாலைத்துறை உதவி பொறியாளருக்கு நான்கு வாரத்திற்குள் வழங்க வேண்டும்.
அதன் மீது சம்மந்தப்பட்ட அலுவலர்கள் எடுக்கும் முடிவை எட்டு வாரத்தில் மனுதாரருக்கு தெரிவிக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.
மேலும், சுங்கச்சாவடி, தவிர்க்கமுடியாத இடங்களை தவிர மற்ற இடங்களில் வேகத்தடைகள் அமைக்க கூடாது என தேசிய நெடுஞ்சாலைத்துறைக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இதையும் படிங்க : நோய் தொற்று காலம் இது - பண்டிகை நாட்களில் உங்கள் கைவசம் இருக்கவேண்டியவை என்ன?