சென்னை: தலைமை செயலகத்தில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, “ஆசிரியர் தகுதி தேர்வு எழுதும் மாணவர்களுக்கு அருகிலேயே தேர்வு மையம் அமைக்கப்படும்.
கடந்த காலங்களில் அறிவிக்கப்பட்ட அரசாணை ரத்து செய்யப்படும். புதிய அரசாணை வெளியிடப்பட்டு தேர்வு நடத்தப்படும். இரண்டு காலம் தேர்வு தள்ளி வைக்கப்பட்டு தேர்வு மையம், வினாத்தாள் தயாரிக்கும் பணிகள் நடைபெறும்.
மொத்தம் 129 மையங்களில் டிஆர்பி தேர்வு நடத்த நடவடிக்கை எடுத்து வருகிறோம். அண்ணா பல்கலைக்கழத்தில் திட்டமிட்டப்படி முதலாமாண்டு வகுப்புகள் நடத்தப்படும்.
கடந்த காலத்தை விட அதிக அளவில் மாணவர்கள் பொறியியல் கல்லூரியில் சேர்ந்து உள்ளனர். இருந்தாலும் காலியிடங்கள் இன்னும் நிரம்பவில்லை. அரசு பள்ளி மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு, கல்லூரி கட்டணம் இலவசம், விடுதி கட்டணம் உள்ளிட்ட காரணங்களால் அதிக அளவில் மாணவர்கள் பொறியியல் படிப்பில் சேர்ந்து உள்ளனர்.
அண்ணா பல்கலைகழகத்தில் தாழ்த்தப்பட்டோர் இட ஒதுக்கீடு வழங்கவில்லை எனப் பத்திரிகை செய்தி வந்துள்ளது. இது குறித்து ஆய்வு செய்ய சமூக நீதி விழிப்புணர்வு குழு சுப.வீரபாண்டியன் தலைமையில் ஆய்வு செய்து அரசுக்கு அறிக்கை அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும். தொழில்நுட்ப கல்லூரிகளில் 1060 விரிவுரையாளர் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும்” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: தமிழ்நாட்டில் கடத்தப்பட்ட சிலைகள் விரைவில் மீட்கப்படும் - சேகர்பாபு