சென்னை: தலைமைச் செயலகத்தில் நாளை (ஜூலை 1) ஆம் தேதி உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடியுடன் நடைபெறும் ஆலோசனை சென்னை பல்கலைக்கழகம், அண்ணா பல்கலைக்கழகம், திறந்தநிலைப் பல்கலைக்கழகம், தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம், அண்ணாமலை பல்கலைக்கழகம், மதுரை காமராஜர் பல்கலைக்கழகம், சேலம் பெரியார் பல்கலைக்கழகம், உள்ளிட்ட 13 பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் கலந்து கொள்கின்றனர்.
இந்த கூட்டத்தில் பல்கலைக்கழகங்களின் நிர்வாக செயல்பாடுகள், தேர்வு முடிவுகள் வெளியிடுவது குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது.
மேலும் பல்கலைக்கழகங்கள், உறுப்பு கல்லூரிகளில் காலியாக உள்ள பேராசிரியர்கள், இதர பணியிடங்களை நிரப்புவது குறித்தும் ஆலோசிக்க வாய்ப்பு உள்ளது.
தமிழ்நாட்டில் கரோனா தொற்று குறைந்து வரும் நிலையில், பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளை திறந்து, நேரடியாக வகுப்புகளை நடத்துவது குறித்தும் ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இதையும் படிங்க: 9 ஆம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் பாலிடெக்னிக் மாணவர் சேர்க்கை