ETV Bharat / state

கல்லூரி பேராசிரியர்களுக்கு ஆடைக் கட்டுப்பாடு வருகிறதா? - கல்லூரி பேராசிரியர்களுக்கு ஆடை கட்டுப்பாடு

தமிழ்நாட்டில் செயல்படும் கல்லூரிகளில் பணிபுரியும் பேராசிரியர்களுக்கு ஆடை கட்டுப்பாடு விதிக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

Etv Bharatகல்லூரி பேராசிரியர்களுக்கு ஆடை கட்டுப்பாடு உயர்கல்வி துறை உத்தரவு

author img

By

Published : Nov 18, 2022, 8:35 PM IST

Updated : Nov 18, 2022, 11:09 PM IST

சென்னை: அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள், தொழில்நுட்பக் கல்லூரிகள் உள்ளிட்ட உயர் கல்வித்துறையின்கீழ் செயல்படும் கல்லூரிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு ஆடை கட்டுப்பாடுகள் விதித்து உயர் கல்வித்துறை அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

உயர் கல்வித்துறை துணைச்செயலாளர் தனசேகர், கல்லூரி கல்வி இயக்குநர், தொழில்நுட்ப கல்வி இயக்குநர், மற்றும் அனைத்து உயர்கல்வி நிறுவனங்களின் பதிவாளர்களுக்கு அனுப்பி உள்ள கடிதத்தில், 'அனைத்து கல்லூரிகளில் பணியாற்றும் பேராசிரியர்களும் மாணவர்களிடமிருந்து தங்களை வேறுபடுத்தி காட்டும் விதமாக மேலங்கி (ஓவர் கோட்) அணிய வேண்டும். பேராசிரியர்களுக்கிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தாதவாறு சீருடை போன்ற கண்ணியமிக்க ஆடைகளை அணிய வேண்டும். பேராசிரியர்கள் தங்கள் உடலமைப்பை வெளிக்காட்டாதவாறு மேலங்கியை அணிய வேண்டும்’ என அதில் கூறியுள்ளார்.

இதுகுறித்து கல்லூரி கல்வி இயக்குநர் ஈஸ்வரமூர்த்தியிடம் கேட்டபோது, 'கல்லூரிகளில் ஆசிரியர்களுக்கு ஆடை கட்டுப்பாடு கொண்டு வருவது குறித்து ஒருவர் கேட்டதற்கு அரசு எங்களிடம் விளக்கம் மட்டுமே கேட்டுள்ளது. நாங்கள் கல்லூரிகளில் ஆடை கட்டுப்பாடு குறித்து எந்தவித அறிக்கையும் இதுவரை அனுப்பவில்லை' எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க:ஒரு அட்மிஷன் கூட இல்லாத பொறியியல் கல்லூரிகள் மூடல் - அண்ணா பல்கலை. திட்டம்?

Last Updated : Nov 18, 2022, 11:09 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.