ETV Bharat / state

'அண்ணா பல்கலை. சிறப்பு அந்தஸ்து; உயர்மட்டக் குழு முடிவு செய்யும்' - அமைச்சர் கே.பி. அன்பழகன் - Anna University IoE status

சென்னை: அண்ணா பல்கலைக்கழக சிறப்பு அந்தஸ்து விவகாரத்தில் அமைச்சர்கள் தலைமையிலான உயர்மட்டக் குழு முடிவு செய்யும் என அமைச்சர் கே.பி. அன்பழகன் தெரிவித்துள்ளார்.

அண்ணா பல்கலை கழக சிறப்பு அந்தஸ்து
அண்ணா பல்கலை கழக சிறப்பு அந்தஸ்து
author img

By

Published : May 21, 2020, 11:36 AM IST

அண்ணா பல்கலைக்கழகத்திற்குச் சிறப்பு அந்தஸ்து வழங்க கடந்தாண்டு மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டது. இதனைத் தொடர்ந்து அமைச்சர்கள் குழு பரிந்துரையின்பேரில் அண்ணா பல்கலைக்கழகத்தை இரண்டாகப் பிரிக்க அரசு முடிவெடுத்தது. மேலும் தமிழ்நாட்டில் பின்பற்றப்படும் 69 விழுக்காடு இடஒதுக்கீட்டைத் தொடருவது குறித்தும் மத்திய அரசிடம் விளக்கம் அளிக்கப்பட்டது.

இதற்கு மத்திய அரசு தரப்பிலிருந்து உரிய பதில் கிடைக்காத நிலையில், சிறப்பு அந்தஸ்தை ஏற்பதில் தொடர்ந்து காலதாமதம் ஏற்பட்டு வந்தது. இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக மே மாதம் இறுதிக்குள் தமிழ்நாடு அரசு தனது முடிவினை தெரிவிக்குமாறு மத்திய அரசு கடிதம் மூலம் கேட்டுக்கொண்டது.

இந்தக் கடிதம் தொடர்பாக முடிவெடுக்க தமிழ்நாடு அரசு அமைத்த அமைச்சர்கள் குழு, அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர், உயர் கல்வித் துறை அலுவலர்கள் ஆகியோர் முதலமைச்சருடன் ஆலோசனை நடத்தினர். 69 சதவீத இடஒதுக்கீடு முறைக்குப் பாதிப்பின்றி திட்டத்தைச் செயல்படுத்துவது தொடர்பாக மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்துடன் அண்ணா பல்கலைக்கழகம் ஆலோசனை மேற்கொண்டு, அதன் முடிவுகளை தமிழ்நாடு அரசிடம் வழங்க முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து உயர் கல்வித் துறை அமைச்சர் கே.பி. அன்பழகன், "அண்ணா பல்கலைக்கழகத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கினால் தமிழ்நாட்டில் உள்ள 69 சதவீத இடஒதுக்கீடு எந்த விதத்திலும் பாதிக்கப்படாது என்பது குறித்து மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்துடன் அண்ணா பல்கலைக்கழகம் ஆலோசனை மேற்கொண்டு, அதன் முடிவுகளை தமிழ்நாடு அரசிடம் வழங்க வேண்டும். அதன்பின்னர் அமைச்சர்கள் தலைமையிலான உயர்மட்டக் குழு முடிவு செய்யும்" என்றார்.

இதையும் படிங்க: தேவையில்லாமல் சுற்றினால் கடும் நடவடிக்கை - அமைச்சர் கே.பி. அன்பழகன் எச்சரிக்கை

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.