ETV Bharat / state

இளம்பெண் பலாத்காரம்; குற்றவாளிக்கு 7 ஆண்டுகள் சிறை உறுதி!

author img

By

Published : Jan 2, 2022, 6:47 AM IST

இளம் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்தவருக்கு விதிக்கப்பட்ட 7 ஆண்டுகள் சிறை தண்டனையை உறுதி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பாலியல் வன்கொடுமை விவகாரம்
பாலியல் வன்கொடுமை விவகாரம்

சென்னை: திருவண்ணாமலையில் கடந்த 2002ஆம் ஆண்டு கலசப்பாக்கம் சரவணன் என்பவர் இளம்பெண் ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். அப்போது அந்த இளம்பெண்ணின் அண்ணன் சம்பவத்தை பார்த்ததால் சரவணன் பயந்து ஓடியுள்ளார். ஆத்திரமடைந்த இளம்பெண்ணின் அண்ணன் சரவணனை நோக்கி கல்லை வீசியதாக கூறப்படுகிறது.

இதில் வீசி எறியப்பட்ட கல் தவறுதலாக இளம்பெண்ணை தாக்கியதால் அவர் காயமடைந்ததாகவும் கூறப்படுகிறது. இச்சம்பவம் குறித்து சரவணனுக்கு எதிராக அளிக்கப்பட்ட புகாரை விசாரித்த திருவண்ணாமலை தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றம், அவருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. இத்தீர்ப்பினை மாவட்ட அமர்வு நீதிமன்றமும் உறுதி செய்தது.

இந்நிலையில் தீர்ப்பை எதிர்த்து சரவணன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு வழக்கு ஒன்றினை தாக்கல் செய்தார். இந்த வழக்கு நேற்று (ஜன.1) நீதிபதி டி. பரத சக்ரவர்த்தி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது சம்பந்தப்பட்ட பெண்ணின் சம்மதத்துடன்தான் தனிமையில் இருந்ததாகவும், இதனால் ஆத்திரமடைந்த பெண்ணின் அண்ணன் கல் வீசியதிலேயே இளம்பெண் காயமடைந்ததாகவும் சரவணன் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அத்துடன் சரவணனுக்கு உடல்நிலை சரியில்லாததுடன், தற்போது மனைவி, குழந்தைகள் என வாழ்ந்து வருவதால் தண்டனையை ரத்து செய்ய வேண்டுமெனவும் வாதிடப்பட்டது.

இருதரப்பு வாதத்தையும் கேட்ட நீதிபதி, பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றம் நடந்த காலம், சமூக பொருளாதார நிலை ஆகியவற்றை கருத்தில் கொண்டு குறைந்தபட்ச தண்டனையை விட குறைவாக தண்டனை வழங்கக்கூடாது என உச்சநீதிமன்றம் கூறியுள்ளதை சுட்டிக்காட்டினார். அத்துடன் திருவண்ணாமலை தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் வழங்கிய தண்டனையை உறுதி செய்து சரவணனின் மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.

இதையும் படிங்க: சென்னைக்கு கூரியர் பார்சலில் கடத்திவரப்பட்ட போதை மாத்திரைகள் பறிமுதல்

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.