கொடநாடு விவகாரம் தொடர்பாக திமுக தலைவர் ஸ்டாலின் பொதுமக்களிடையே அவதூறான கருத்துகளை பரப்பி வருவதாக தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தது. இந்த வழக்கு நிலுவையில் உள்ளது.
இந்நிலையில், நாடாளுமன்றத்தேர்தல் பரப்புரையின்போது கொடநாடு விவகாரம் தொடர்பாக ஸ்டாலின் பேசுவதற்கு தடை கேட்டு தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு அளித்திருந்தது. மேலும், கொடநாடு விவகாரம் மற்றும் கொள்ளை சம்பவங்கள் தொடர்பாக ஸ்டாலின் தவறான கருத்துக்களை வெளியிட்டு வருவதாகவும் தமிழக அரசு தனது மனுவில் குறிப்பிட்டிருந்தது.
இதனிடையே இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், தமிழக அரசின் மனு குறித்து மு.க.ஸ்டாலின் ஏப்ரல் மூன்றாம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.