ETV Bharat / state

யானைகள் ரயில் மோதி பலியாகும் அவலம்; தெற்கு ரயில்வே பாலக்காடு மண்டல பொது மேலாளர் நேரில் ஆஜராக உத்தரவு

author img

By

Published : Oct 18, 2022, 9:32 PM IST

கஞ்சிக்கோடு - வாளையாறு ரயில் வழித்தடத்தில் ரயில் மோதி இரு பெண் யானைகள் பலியானது குறித்து, தெற்கு ரயில்வே பாலக்காடு மண்டல பொது மேலாளர் நேரில் ஆஜராகி விளக்கமளிக்கும்படி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தெற்கு ரயில்வே பாலக்காடு மண்டல பொது மேலாளர் நேரில் ஆஜராக உத்தரவு

சென்னை: உயர்நீதிமன்றத்தில் யானைகள் பாதுகாப்பது தொடர்பான வழக்குகள், நீதிபதிகள் சதீஷ்குமார் மற்றும் பரத சக்கரவர்த்தி அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தன.

அப்போது, கடந்த 14ம் தேதி கஞ்சிக்கோடு - வாளையாறு இடையே ரயில் தண்டவாளத்தைக் கடக்க முயன்ற யானைக் கூட்டத்தின் மீது ரயில் மோதியதில் இரு பெண் யானைகள் பலியாகியுள்ளதாகவும், காயமடைந்த குட்டி யானை காணவில்லை எனவும் தெரிவித்த நீதிபதிகள், இதுசம்பந்தமாக தெற்கு ரயில்வே பாலக்காடு மண்டல பொது மேலாளர் நவம்பர் 24 ம் தேதி நேரில் ஆஜராகி விளக்கமளிக்க உத்தரவிட்டனர்.

மேலும், யானைகள் வழித்தடத்தின் வழியாகச் செல்லும் ரயில்களின் வேகத்தைக் குறைக்க உத்தரவிட்டும், அதற்குச் சாத்தியமில்லை எனப் பாலக்காடு மண்டல பொறியாளர் அளித்த அறிக்கை என்பது எந்தவிதமான அறிவியல் ஆய்வு அடிப்படையானதல்ல எனத் தெரிவித்த நீதிபதிகள், யானைகள் வழித்தடங்களில் ரயில்களின் வேகத்தைக் குறைத்து விபத்துக்களைத் தடுப்பது குறித்து ஆய்வு செய்யக் குழு அமைக்கும்படியும், இக்குழு ஒரு மாதத்தில் அறிக்கை அளிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டு, விசாரணையை நவம்பர் 24ம் தேதிக்குத் தள்ளி வைத்துள்ளனர்.

மற்றொரு வழக்கில், யானைகள் வழித்தடத்தில் உள்ள சாலையில் வைக்கப்பட்டுள்ள எச்சரிக்கை அலாரங்கள் 24 மணி நேரமும் எச்சரிக்கை வாசகங்களை ஒலிபரப்பிக் கொண்டிருக்கும் போது, யானைகளால் கடந்து செல்ல முடியாது எனத் தெரிவித்த நீதிபதிகள், இந்த அலாரங்களை அகற்றி விட்டு, வேகத்தடைகளை அமைக்க உத்தரவிட்டுள்ளனர்.

அதேபோல, கோவை மாவட்டம் பேரூர் பகுதியில் யானைகள் வழித்தடங்களில் அனுமதியின்றி செயல்படும் செங்கற்சூளைகளை மூட உத்தரவிட்ட நீதிபதிகள், அதுகுறித்து அறிக்கை தாக்கல் செய்யவும் அறிவுறுத்தியுள்ளனர்.

இதையும் படிங்க: தமிழகத்தில் ஆண்டுக்கு 3 லட்சம் பேர் இந்தி படிக்கின்றனர் - இந்தி பிரசார் சபா தகவல்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.