ETV Bharat / state

நடிகை சித்ரா போதையில் இருந்தாரா?  ரகசிய உரையாடலில் பேசியது என்ன!

author img

By

Published : Jan 20, 2021, 7:35 AM IST

இறுதி நிமிடங்களில் நடிகை சித்ராவிற்கு நடந்தது என்ன என்பது குறித்து, சித்ரா கணவர் ஹேம்நாத் அவரது நண்பர் ரோஹித்திடம் பேசும் உரையாடல் வெளியாகி பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கஞ்சா
கஞ்சா

சின்னத்திரை நடிகை சித்ரா, கடந்தாண்டு டிசம்பரில் தனியார் ஹோட்டலில் தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக பதிவு செய்யப்பட்ட வழக்கில், அவரது கணவர் ஹேம்நாத் கைது செய்யப்பட்டார்.

மத்திய குற்றப்பிரிவு காவல் துறை விசாரணைக்கு மாற்றப்பட்ட இவ்வழக்கில் கைதான சித்ராவின் கணவர் ஹேம்நாத், ஜாமீன் கேட்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.

ஜாமீன் வழங்க எதிர்ப்பு
ஹேம்நாத்துக்கு ஜாமீன் வழங்க எதிர்ப்பு தெரிவித்து, அவரது நண்பரான சையது ரோஹித் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். அதில், "ஹேம்நாத் பல பெண்களுடன் தொடர்பு வைத்துக் கொண்டு பணம் பறித்து வந்தார்.

இதுகுறித்து பல முறை நான் எச்சரித்தும் கேட்காததால் அவரிடம் இருந்து விலகியிருந்தேன். தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் சக நடிகருடன் நடனமாடியது குறித்து, சித்ராவுக்கும் அவருக்கும் இடையில் சண்டை இருந்து வந்தது.

அனைத்து தகவல்களும் தெரிந்த தன்னை இதுவரை காவல் துறை விசாரணைக்கு அழைக்கவில்லை" எனக் குறிப்பிட்டிருந்தார்.

ரகசிய வாட்ஸ்அப் கால்
சித்ரா மரணம் தொடர்பாகப் பல புதிய தகவல்கள் தொடர்ந்து வெளியாகிவருகின்றன. அவரது கணவர் ஹேம்நாத் தற்கொலைக்குத் தூண்டியதாக கைது செய்யப்பட்டாலும், இருவருக்குமான பிரச்சனை என்ன ? சித்ராவின் மன உளைச்சலுக்கு இது தான் காரணம் என குறிப்பிட்டு சொல்ல முடியாத அளவிற்கு பல்வேறு குழப்பங்களும், சித்ரா வழக்கில் நீடித்து வருகிறது.

இந்நிலையில், சித்ரா கணவர் ஹேம்நாத் அவரது நண்பர் ரோகித்துடன் பேசும் சுமார் 30 நிமிட உரையாடல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சித்ரா மரணத்திற்குப் பிறகு ஒரு நாள் முழுவதும் காவல் நிலையத்தில் இருந்த ஹேம்நாத்தை, மறுநாள் இரவு தான் அனுப்பினர்.

அன்று இரவு நண்பர்கள் இருவரும் பேசி கொள்கின்றனர். வாட்ஸ்அப் காலில் பேசிக் கொள்ளும் இருவரும் இது பதிவாகாது எனக் கூறிவிட்டு தான் உரையாடல் தொடர்கிறது. காவல் துறையிடம் வேண்டுமானால் நீ மாற்றி சொல்லிக் கொள், ஆனால் தன்னிடம் மட்டும் உண்மையைக் கூறு என, ரோஹித் சத்தியம் கேட்கிறார்.

கஞ்சா போதையில் நடிகை சித்ரா

இதைத் தொடர்ந்து பேசும் ஹேம்நாத், சித்ரா தற்கொலை செய்து கொண்ட அன்று நடந்தது குறித்து விவரிக்கிறார். வெளியான தகவலில் சொன்னது போல், தான் சித்ராவுடன் படப்பிடிப்பு தளத்திற்குச் செல்லவில்லை என்றும், சித்ரா தனியாக தனது காரில் சென்று வந்ததாகவும் கூறுகிறார்.

தொடர்ந்து சித்ரா வரும் போது கஞ்சா போதையில் இருந்தது போல் உள்ளதாகக் கூறினார். தன்னை பற்றிய முழுவிவரங்களை பற்றி சித்ராவின் தாயாரிடம் கூறிவிட்டதாகவும், அதனை பற்றி சித்ராவிடம் கேட்டு தாயார் சண்டையிட்டதாகவும், தன்னால் பதில் கூறமுடியாமல் துண்டித்துவிட்டதாகக் கூறிய சித்ரா உன்னை பற்றிய தகவலை ஏன் கூறினாய் எனவும் கேட்டுள்ளார்.

பணம் கேட்டு தொந்தரவு செய்த சித்ரா தாயார்
சித்ராவின் அம்மாவை குற்றம்சாட்டும் ஹேம்நாத், சித்ரா அறைக்குத் திரும்பியதும் இனி தான் திருவான்மியூர் வீட்டிற்குச் செல்ல முடியாதா? திருமண வேலைகளைத் தனியாக தான் பார்க்க வேண்டுமா? என கேட்டதாகவும், சித்ரா மூன்று கோடி செலவு செய்து கட்டிய திருவான்மியூர் வீட்டிற்கு இனி செல்ல முடியாதா என கேட்டு வருந்தியாகவும் கூறுகிறார்.

சித்ராவின் தாயார் கடைசி மூன்று நாட்களும் பணம், பணம் என கேட்டு தொந்தரவு செய்ததாகக் ஹேம்நாத் தனது நண்பரிடம் கூறுகிறார். அறைக்குத் திரும்பியப் பிறகு அவர் வழக்கமான குறும்பு தனமில்லாமல் சோர்வாக காணப்பட்டதாவும், குடும்பத்தில் இருந்து உன்னால் தன்னை பிரித்து விட்டார்கள் என மனம் வெதும்பி பேசியதாக தெரிவிக்கிறார்.

புகைப்பிடிக்க சென்ற சித்ரா

பின்னர் இருவரும் புகைப்பிடிக்க வெளியில் சென்றதாகவும், திடீரென அறைக்குச் சென்று கதவை சித்ரா தாழிட்டு கொண்டதாகக் கூறும் ஹேம்நாத், குடும்பத்தை நினைத்து அழுது கொண்டிருக்கிறார் என எண்ணியதால் அவரை வெகுநேரம் கதவை திறக்குமாறு அழைத்ததாகக் கூறுகிறார். தங்கியிருந்த 'வில்லா" விடுதி அலுவலகத்தில் இருந்து தூரமாக இருந்ததால் நடந்தே சென்று மாற்று சாவி கேட்டு ஊழியருடன் வந்து திறந்து பார்த்து போது, அவர் தூக்கிட்ட நிலையில் தொங்கியதைப் பார்த்து அதிர்ச்சியடைந்ததாக, அந்த உரையாடலில் தெரிவிக்கிறார்.

சக நடிகருடன் சித்ரா டான்ஸ்

எத்தனையோ முறை இருவருக்குள்ளும் சிறு சிறு பிரச்சனைகள் ஏற்பட்டுள்ளன. ஆனால், சம்பவத்தன்று சித்ராவுடன் தனக்கு எந்த சிறு பிரச்சனையும் இல்லை. ஆனால், அறைக்கு சோகமாக திரும்பிய சித்ராவிடம் இன்று நிகழ்ச்சியில் தனக்கு கொடுத்த சத்தியத்தை மீறி அவனுடன் ஜோடி சேர்ந்து ஆடினாயா? என கேட்டாதாகவும், அதற்கு உனக்கு இது தான் முக்கியமா என கேட்டு சித்ரா கண் கலங்கியதாகவும், ஆனால் அது சிறு பிரச்சனை தான் உடனே சரியாகிவிட்டது.

சித்ரா கடந்த மூன்று நாட்களாக, அவரது தாயார் கொடுத்த தொந்தரவால் தான் கஷ்டத்தில் இருந்தார்" என தனது நண்பரிடம் தொடர்ந்து கூறுகிறார். தற்கொலைக்கு காரணமானவர் சித்ராவின் தாயார் தான் என அவ்வப்போது அவரை ஆபாச வார்த்தைகளால் திட்டும் ஹேம்நாத், திருவான்மியூர் வீட்டில் அவரது குடும்பத்தினருடன் ஒரு மாதம் தங்கியிருந்த போது, அவரது தாயார் எந்த அளவிற்கு டார்ச்சர் செய்வார் என்பதைத் தான் கண்கூடாகப் பார்த்ததாக கூறுகிறார்.
முன்னாள் காதலனுக்குத் திருமணம் நடந்தது பற்றி அடிக்கடி சித்ரா பேசி வந்ததாகவும், தைரியமான பெண்ணாகக் காட்டி கொண்டாலும், தனிமையில் உடைந்து விடுவார் என ஹேமநாத் குறிப்பிடுகிறார்.

சித்ரா தலையில் காயம்
தொடர்ந்து பேசிக் கொண்டிடேயிருந்த ஹேம்நாத் ஓரிடத்தில் மெல்லிய குரலில் எதிர்முனையில் இருந்த ரோஹித்திடம், அறைக்குத் திரும்பிய சித்ராவின் தலையில் காயம் இருந்ததைத் தான் பின்னர் கவனித்ததாகவும், படப்பிடிப்பு முடிந்து சித்ரா எங்குச் சென்று வந்தார் ? என்ன பிரச்சனை என தனக்கு தெரியவில்லை என ரகசியம் சொல்வது போல் கூறுகிறார்.
ஒருவேளை காவல் துறையினர் சக நடிகருடன் ஏற்பட்ட பிரச்சனை பற்றி ஏதாவது கேட்டால் எங்கள் இருவருக்கும் எந்த பிரச்சனையும் வராது எனக் கூறு, என்ன சொல்ல வேண்டும் என தனது வழக்கறிஞரிடம் கான்பிரன்ஸ் காலில் ஒருமுறை கேட்டுகொள் என்கிறார்.

மசினக்குடியில் என்ன நடந்தது
உரையாடல் இடையே சிறிது நேரம் மசினக்குடி சுற்றுலா தளத்திற்குச் சென்று வந்ததைப் பற்றி பேச்சு எழுகிறது. விஜய் டிவி நிகழ்ச்சி தொகுப்பாளர் மா.கா.பா ஆனந்த் தான் மசினகுடி பற்றி சொல்லியிருக்க வேண்டும் என பேசிக்கொள்கின்றனர்.

மசினக்குடி சென்றதை காவல் துறைக்கு எப்படி தெரியும் என ரோஹித் கேட்க, அதற்கு ஹேம்நாத் தனது செல்போனில் உள்ள போட்டோ, சாட் ஆகியவற்றை வைத்து கண்டுபிடித்துவிட்டார்கள் என்கிறார். ஒரு வேளை போலீஸ் கேட்டால், மசினக்குடியில் பிரச்சனை எதுவும் இல்லை, இருவரும் சந்தோசமாக தான் இருந்தார்கள் என சொல் என்கிறார் ரோஹித்.

திடீரென சித்ராவின் அம்மாவை சும்மா விட மாட்டேன் என ஆவேசமடையும் ஹேம்நாத், தானும் சித்ராவை போலவே இறந்துவிடுவேன் என அழுகிறார். இப்படியாக சுமார் 30 நிமிட உரையாடல் முடிகிறது. இடை இடையே ரோஹித் பேசுவதைத் தடுத்து பேச்சை திசைத்திருப்பும் ஹேமநாத், எதையோ மறைக்கிறார் என்பதும் தெரியவருகிறது.
சித்ராவின் தலையில் காயம் இருந்ததா, ஹேமநாத் சித்ராவைத் தாக்கினாரா என்ற மர்மம் தொடரும் நிலையில் ரோஹித்தையும், இந்த ஆடியோவின் அடிப்படையிலும் மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர் விசாரணையைத் தீவிரப்படுத்தினால் மேலும் பல தகவல்கள் வெளிவரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.