ETV Bharat / state

ஹெலிகாப்டர் விபத்து: சென்னையைச் சேர்ந்த மூவர் பலியான சோகம்

author img

By

Published : Oct 18, 2022, 10:37 PM IST

கேதர்நாத்தில் ஹெலிகாப்டர் விபத்தில் சென்னையைச் சேர்ந்த மூவர் பலியானது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையைச் சேர்ந்த மூவர் பலியான சோகம்
சென்னையைச் சேர்ந்த மூவர் பலியான சோகம்

உத்தரகாண்ட் மாநிலம் ருத்ரபிரயாக் மாவட்டத்தில் கேதர்நாத் யாத்ரீகர்களை அழைத்து சென்ற ஹெலிகாப்டர் இன்று காலை திடீரென வெடித்து சிதறியதில் 7 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். உடனே மாநில பேரிடர் மீட்பு படை மற்றும் மாவட்ட காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

இந்த விபத்தில் தமிழ்நாட்டை சேர்ந்த சுஜாதா (52), பிரேம்குமார் (63), கலா (52) மற்றும் குஜராத்தை சேர்ந்த கிரிதிபாரத், உர்வி பாரத், பூர்வா ராமனுஜா, பைலட் மகாராஷ்ட்ராவை சேர்ந்த அனில் சிங் (57) உள்ளிட்ட 7 பேர் உயிரிழந்துள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளது. இந்த விபத்து தொடர்பாக பிரதமர் மோடி, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி உயிரிழந்த தமிழ்நாட்டை சேர்ந்த மூவரில் பிரேம்குமார் மற்றும் சுஜாதா ஆகியோர் கணவன், மனைவி என்பதும் திருமங்கலம் சாந்தம் காலனியில் வசித்து வந்ததும், இவர்களது உறவினர் கலா என்பதும் மயிலாப்பூரில் வசித்து வருவதும் தெரியவந்தது.

ஓய்வு பெற்ற லஞ்ச ஒழிப்பு துறை அலுவலரான பிரேம் குமாருக்கு காவியா மற்றும் பிரசாந்த் என இரு பிள்ளைகள் உள்ளனர். இருவரும் திருமணம் முடிந்து மகள் காவியா அமெரிக்காவிலும், மகன் பிரசாந்த் சிங்கப்பூரிலும் பணியாற்றி வருகின்றனர்.

இந்தநிலையில் கேதர்நாத் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளுக்கு ஆன்மீக சுற்றுலா மேற்கொள்ள கடந்த 12 ஆம் தேதி முதல் 23 ஆம் தேதி வரை தனியார் சுற்றுலா மையம் மூலமாக புக் செய்துள்ளனர். பின்னர் 12 ஆம் தேதி விமானத்தில் பிரேம்குமார், சுஜாதா தம்பதி மற்றும் ரமேஷ், கலா தம்பதியினர் ஆன்மீக சுற்றுலா சென்றுள்ளனர்.

இந்த நிலையில் இன்று காலை கேதர்நாத்தில் இருந்து குப்தகாசி பகுதிக்கு பிரேம் குமார், சுஜாதா, கலா ஆகியோர் செல்லும் போது ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி உயிரிழந்திருப்பது தெரியவந்துள்ளது. அதில் கலாவின் கணவர் ரமேஷ் மட்டும் குதிரை சவாரி மேற்கொண்டதால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியதாக கூறப்படுகிறது.

இந்த சம்பவம் தொடர்பாக அண்ணா நகர் மத்திய வருவாய் கோட்டாட்சியர் பிரவீனா குமாரி மற்றும் அம்பத்தூர் தாசில்தார் ராஜசேகர், திருமங்கலம் போலீசார் ஆகியோர் இறந்த பிரேம்குமார் வீட்டிற்கு சென்று விசாரணை நடத்தினர். விபத்தில் உயிரிழந்த மூவரின் உடல் நாளை மதியம் சென்னைக்கு வர இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதையும் படிங்க: பில்லி, சூனியத்திற்கு எதிராக சட்டம் - கேரள அரசு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.