ETV Bharat / state

7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

தமிழ்நாட்டில் ஏழு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

author img

By

Published : Aug 23, 2021, 3:17 PM IST

தமிழ்நாட்டில் 7 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

சென்னை: இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "தமிழ்நாடு கடற்கரையை ஒட்டி நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் கடலூர், மயிலாடுதுறை, பெரம்பலூர், அரியலூர், சேலம், திண்டுக்கல், மதுரை ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழை பெய்யும்.

புதுச்சேரியில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் இன்று (ஆக.23) பெய்யக்கூடும்.

சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் நாளை (ஆக.24) இடி மின்னலுடன் கூடிய கன மழை பெய்யும். ஏனைய மாவட்டங்கள் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

ஆகஸ்ட் 25, 26 ஆகிய தேதிகளில் நீலகிரி, கோவை, கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் ஆகிய பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும். உள் மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்.

ஆகஸ்ட் 27ஆம் தேதி நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழை பெய்யும். ஏனைய மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 33 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்ச மழை அளவு (சென்டிமீட்டரில்):

கலவை (ராணிப்பேட்டை) 8, மாரண்டஹள்ளி (தர்மபுரி), ராஜபாளையம் (விருதுநகர்) தலா 7, நத்தம் (திண்டுக்கல்) 6, வேலூர், காட்பாடி (வேலூர்) தலா 5 செ.மீட்டர் மழை பதிவாகியிருந்தது.

உசிலம்பட்டி (மதுரை), ஆண்டிபட்டி (தேனி), கொடைக்கானல் (திண்டுக்கல்) உள்ளிட்ட இடங்களில் தலா 4 செ.மீட்டரும், ஆற்காடு (ராணிப்பேட்டை), கிருஷ்ணகிரி, சின்னக்கல்லார் (கோவை), காமாட்சிபுரம் (திண்டுக்கல்), முத்துப்பேட்டை (திருவாரூர்), திண்டுக்கல், விரிஞ்சிபுரம் (வேலூர்) தலா 3 செ.மீட்டரும், கோவில்பட்டி (தூத்துக்குடி), உடுமல்பேட்டை (திருப்பூர்), திருத்துறைப்பூண்டி (திருவாரூர்), நாமக்கல், உதகமண்டலம் (நீலகிரி) தலா 2 செ.மீட்டரும், விருதுநகர், தொழுதூர் (கடலூர்), வால்பாறை தாலுகா அலுவலகம் (கோவை), சோலையார் (கோவை), சத்தியமங்கலம் (ஈரோடு) உள்ளிட்ட இடங்களில் தலா ஒரு செ.மீட்டரும் மழையும் பதிவாகியிருந்தது.

மீனவர்களுக்கான எச்சரிக்கை அரபிக்கடல் பகுதிகள்:

ஆகஸ்ட் 23, 24 ஆகிய தேதிகளில் தென் மேற்கு மற்றும் மத்திய மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோமீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

ஆகஸ்ட் 25, 26, 27 ஆகிய தேதிகளில் தென் மேற்கு மற்றும் மத்திய மேற்கு அரபிக்கடல், வடக்கு அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோமீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: பானிபூரியில் சிறுநீரா? - அதிர்ச்சி வீடியோ

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.