ETV Bharat / state

2 மாதங்களுக்கு பின் போக்குவரத்து நெரிசலை சந்திக்கும் சென்னை! - 2 மாதங்களுக்குப்பின் போக்குவரத்து நெரிசலை சந்திக்கும் சென்னை

சென்னை: ஊரடங்கில் தளர்வுகள் ஏற்படுத்தப்பட்டதால் நீண்ட நாள்களுக்கு பிறகு சென்னை ஜிஎஸ்டி சாலை கடும் போக்குவரத்து நெரிசலை சந்தித்துள்ளது.

heavy traffic jam accrued in chennai gst road

author img

By

Published : May 28, 2020, 11:41 AM IST

கரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால் மிகவும் பரபரப்பாக காணப்படும் சென்னை சாலைகள் சில நாள்களாக வெறிச்சோடி காணப்பட்டன. சென்னையில், கரோனா பரவலின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டேவருகிறது. இதன்காரணமாக, சென்னை கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக நீடித்துவருகிறது.

இந்நிலையில், ஊரடங்கில் சில தளர்வுகள் அளிக்கப்பட்டு, மக்கள் தங்கள் பணிகளை மேற்கொள்ள ஆரம்பித்த சில நாள்களிலேயே, சென்னையின் சாலைகள் மீண்டு பரபரப்பிற்குள்ளாகியுள்ளன.

போக்குவரத்து நெரிசலுக்குள்ளான ஜிஎஸ்டி சாலை

இன்று, சென்னை ஜிஎஸ்டி சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுமளவிற்கு வாகனங்கள் இயக்கப்பட்டுள்ளன. இவர்கள் எதற்காக பயணம் மேற்கொள்கின்றனர், உரிய அனுமதி பெற்று பயணம் மேற்கொள்கின்றனரா என்பதை காவல் துறையினரும் கண்காணிக்க தவறியுள்ளனர். இதனால் சென்னையில் மேலும் கரோனா வைரஸின் கோரப்பிடி அதிகரிக்க வாய்ப்புள்ளதாக பலரும் குற்றம்சாட்டிவருகின்றனர்.

இதையும் படிங்க: பாடி மேம்பாலத்தில் காற்றில் கறைந்த சமூக இடைவெளி!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.