தமிம்நாடு, புதுச்சேரியின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில், சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், திருவள்ளூர், வேலூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், கடலூர், தஞ்சை, அரியலூர், பெரம்பலூர், திருவாரூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம் உள்ளிட்ட 15 மாவட்டங்களில் மிதமான மழை முதல் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.
இதில் குறிப்பாக, குமரி, தேனி, மதுரை உள்ளிட்ட ஒன்பது தென் மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதனைத்தொடர்ந்து, தென்தமிழ்நாடு, மாலத்தீவு, குமரிக் கடல் உள்ளிட்ட பகுதிகளில் சூறைக்காற்று வீசுமென்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்லவேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், சென்னையில் இன்று காலை முதலே, அண்ணா சாலை, நுங்கம்பாக்கம், மடிப்பாக்கம், வேளச்சேரி, வடபழனி, கோயம்பேடு, கிண்டி, கே.கே.நகர், போரூர், பூந்தமல்லி, வளசரவாக்கம், அண்ணா நகர், அசோக் நகர், மாம்பலம், அரும்பாக்கம், கோடம்பாக்கம், சூளைமேடு உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.
இதையும் படிங்க:
அடுத்த 2 நாட்களுக்கு கன மழை பெய்யும் - சென்னை வானிலை ஆய்வு மையம்