சென்னை: இதுதொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், " வெப்பச்சலனம், குமரிக்கடல் மற்றும் இலங்கையை ஒட்டி நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாகவும், கோவா, கர்நாடாக கடலோர பகுதி முதல் தென் தமிழ்நாடு வரை நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாகவும் இன்று விருதுநகர், மதுரை, சிவகங்கை, தேனி, திண்டுக்கல், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருச்சி, சேலம், நாமக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும், ஏனைய மாவட்டங்கள், புதுவை காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடும்.
மேலும், நாளை தமிழ்நாட்டில் ஒரு சில வட உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடிமின்னலுடன் கூடிய கனமழையும், ஏனைய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும். அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிபட்சமாக வெப்பநிலை 36, குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியை ஒட்டி இருக்கும்.
கேரளா, கடலோரப்பகுதிகள் லட்சத்தீவு பகுதிகளில் காற்று மணிக்கு 40 முதல் 50கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். மீனவர்கள் இப்பகுதிக்குச் செல்லவேண்டாம். தென் மேற்கு பருவமழை தமிழ்நாட்டில் பெரும்பாலான மாவட்டங்களில் இன்று முன்னேறியுள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் தென்மேற்கு பருவ மழை பெய்ய வாய்ப்புள்ளது" என குறிப்பிட்டுள்ளது.
இதையும் படிங்க: அரூரில் இடியுடன் கூடிய கனமழை