மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக கன்னியாகுமரி, தேனி, நெல்லை, விருதுநகர், கோவை, திருப்பூர், நீலகிரி, தஞ்சை, திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது.
சென்னையைப் பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். மேலும் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளது. குமரிக்கடல், மாலத்தீவு கடல் பகுதிகளில் சூறைக்காற்று வீசுமென்பதால் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: இடி மின்னலுடன் கனமழை - வீட்டிற்குள் மழை நீர் புகுந்ததால் மக்கள் அவதி