சென்னை: திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, கள்ளக்குறிச்சி ஆகிய மூன்று மாவட்டங்களில் பள்ளி குழந்தைகளுக்கு வழங்கப்படும் ஊட்டச்சத்து மாத்திரையினால் குழந்தைகளுக்கு உடல் உபாதைகள் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். தற்போது குழந்தைகள் அனைவரும் நலமுடன் இருப்பதாகவும் மாத்திரை மாதிரிகளை பரிசோதனை மையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது எனவும் சுகாதாரத்துறை செயலாளர் செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.
மேலும், பள்ளிகளில் மாத்திரை வழங்கும்போது மாணவர்கள் உணவு அருந்துவதற்கு முன்னதாக வழங்கப்பட்டதா என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் விவரங்களை தெரிவிக்க வேண்டும். தற்காலிகமாக ஊட்டச்சத்து மாத்திரையை நிறுத்தி வைக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.
வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி மாத்திரையை வழங்க வேண்டும் எனவும் மாவட்ட ஆட்சியர் இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சுகாதாரத்துறை செயலாளர் செந்தில்குமார் அறிவுறுத்தியுள்ளார்.
இதையும் படிங்க: முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகத்திற்கு கொலை மிரட்டல் - டிஜிபி அலுவலகத்தில் புகார்