இந்த விழாவில் பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர், "மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் சிந்தனையில் உதித்த சிறந்த மருத்துவர்களுக்கான விருது வழங்கும் திட்டத்தின் கீழ் அரசு மற்றும் தனியார் மருத்துவர்களுக்கு 50 ஆயிரத்திற்கு காசோலையும், சான்றிதழும், பதக்கமும் வழங்கப்படுகிறது.
தமிழ்நாடு அரசு எடுத்த பல்வேறு சீரிய முயற்சியால் தமிழ்நாட்டில் குழந்தை இறப்பு மற்றும் தாய்மார்களின் இறப்பு விகிதம் குறைந்துள்ளது. உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் நான்காண்டுகளாக தமிழ்நாடு சிறந்த மாநிலத்திற்கான விருதை பெற்றுவருகிறது. ஜப்பான் மற்றும் உலக வங்கியிடமிருந்து நிதி உதவி பெற்று தமிழ்நாட்டில் மருத்துவத் துறைக்கான உபகரணங்கள் வாங்கி மருத்துவத் துறை மேம்படுத்தப்பட்டு வருகிறது” என்றார்.
மேலும் பேசிய அவர், 2019ஆம் ஆண்டுக்கான சிறந்த மருத்துவர்களுக்கான விருது ஐந்து துறைகளில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 480 மருத்துவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. மேலும் 20 மருத்துவர்களுக்கு சிறந்த மருத்துவர்களுக்கான ரூ.50 ஆயிரம் ரொக்க பரிசும் வழங்கப்பட்டது. தமிழ்நாடு மருத்துவத்தில் சிறந்து விளங்குவதற்கு மருத்துவர்கள் முதுகெலும்பாக உள்ளனர்" என்றார்.