ETV Bharat / state

தமிழ்நாட்டிற்கு நீட் வேண்டாம்- மா.சுப்பிரமணியம் - நீட் தேர்வு

தமிழ்நாட்டில் நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என ஒன்றிய அரசிடம் வலியுறுத்தப்பட்டதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.

மா.சுப்பிரமணியம்
மா.சுப்பிரமணியம்
author img

By

Published : Jul 16, 2021, 10:03 AM IST

மதுரையிலிருந்து நேற்று (ஜூலை 15) நள்ளிரவு சென்னை விமான நிலையம் வந்த சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவின்படி ஒன்றிய கல்வித் துறை அமைச்சர், சுகாதாரத் துறை அமைச்சர் ஆகியோர்களைச் சந்தித்து தமிழ்நாட்டின் மக்கள் நல்வாழ்வுத் துறைக்குத் தேவையான கட்டமைப்பை கேட்டிருக்கிறோம்.

நீட் தேர்வை பொருத்தவரை தமிழ்நாட்டில் விலக்கு அளிக்க வேண்டும் என்கின்ற வலியுறுத்தலை முதலமைச்சர் தொடர்ந்து எடுத்துவரும் நடவடிக்கைகள் குறித்து ஒன்றிய அரசுக்கு வலியுறுத்தியிருக்கிறோம்.

பிரதமருக்கு, முதலமைச்சர் ஸ்டாலின் எழுதிய கடிதத்தின் நகலை தந்து, தமிழ்நாட்டில் ஒரு கோடி சிறப்பு தடுப்பூசிகளை வழங்கவேண்டும் என்று சுகாதாரத் துறை அமைச்சரிடம் கேட்டுள்ளோம். எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி கட்டுமான பணிகளை உடனடியாக தொடங்கிட வேண்டும் என்கின்ற வேண்டுகோளையும் வலியுறுத்தியுள்ளோம்.

கோவையிலும் புதிய எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையும் விடுத்துள்ளோம்.

மருத்துவக் கல்லூரியில் மாணவர் சேர்க்கை:

தமிழ்நாட்டில் நடைபெற்று கொண்டிருக்கின்ற 11 மருத்துவக் கல்லூரியில் தற்போது சூழ்நிலை ஒரு புத்தகமாகவே புகைப்படத் தொகுப்பை கொடுத்து உடனடியாக ஆய்வுக் குழுவை அனுப்பி இந்த ஆண்டே மாணவர் சேர்க்கை விரைவுபடுத்த வேண்டும் என்றும் ஒவ்வொரு மருத்துவக் கல்லூரிக்கும் 150 மாணவர்கள் என்கின்ற வகையில் ஆயிரத்து 650 மாணவர்களை உடனடியாக சேர்ப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது எனவே அந்த ஆய்வுகளை உடனடியாக அனுப்பிட வேண்டும் என்கின்ற வேண்டுகோளையும் வைத்துள்ளோம்.

கறுப்பு பூஞ்சைக்குத் தேவையான ஆம்போடெரிசின், கொசசுனசுல் ஆகிய மருந்துகளை ஒன்றிய அரசு கூடுதலாக வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளோம். என்.எச்.எம் தேசிய சுகாதார குழுமத்திற்குத் தேவையான இரண்டாம் அலைக்கு ஏற்பட்ட செலவினங்களும், மூன்றாம் அலைக்காக செய்யவேண்டிய கட்டமைப்புக்குமான ஆயிரத்து 500 கோடி ரூபாய் திட்ட மதிப்பீடு தயாரித்து தரப்பட்டுள்ளது.

நீட் தேர்வு வேண்டாம்:

அதில், 800 கோடி ரூபாயை ஒன்றிய சுகாதாரத் துறை இன்றைக்கு விடுவித்திருக்கிறது. மீண்டும் செலவு செய்ய நிதி ஒதுக்கீடு தருவோம் என ஒன்றிய அரசு உறுதியளித்துள்ளது. நீட் தேர்வு குறித்து தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய சூழ்நிலையை, கிராமப்புற மாணவர்களுக்கு இருக்கக்கூடிய இக்கட்டான சூழ்நிலை ஆகியவற்றை ஒன்றிய அரசிடம் எடுத்துச் சொல்லியிருக்கிறோம்.

நீட் தேர்வு பாதிப்பு குறித்தும், மாணவர்களின் சூழ்நிலைகள் குறித்தும் முன்னாள் நீதிபதி ஏ.கே. ராஜன் தலைமையிலான குழு செய்தியாளரிடம் தெரிவித்துள்ளது. 85 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கருத்துகளில் பலரும் நீட் தேர்வு வேண்டாம் என்று கருத்து தெரிவித்துள்ளனர்.

ஏ.கே. ராஜன் அளித்த அறிக்கையை, முதலமைச்சர் ஸ்டாலின் சட்ட வல்லுனர்களுடன் விவாதித்து வருகிறார்.

இதையும் படிங்க: ஒன்றிய அமைச்சர் மன்சுக் மாண்டேவியாவை சந்தித்த மா.சுப்பிரமணியம்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.