ETV Bharat / state

மருத்துவ உதவி கேட்டவருக்கு உடனடியாக உதவிய சுகாதாரத்துறை அமைச்சர் - medical assistance

சென்னை விமான நிலையத்தில் சுகாதாரத்துறை அமைச்சரை சந்தித்து தங்கள் 10 வயது மகனுக்கு மருத்துவ உதவி கேட்ட பெற்றோருக்கு உடனடியாக அமைச்சர் மா.சுப்ரமணியன் உதவி செய்தார்.

சுகாதாரத்துறை அமைச்சர்
சுகாதாரத்துறை அமைச்சர்
author img

By

Published : Aug 9, 2021, 8:29 PM IST

சென்னை: ஆலந்தூரைச் சோ்ந்த 10 வயது சிறுவன் நவீன். இவருக்கு சிறுநீரக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தனியாா் மருத்துவமனைகளில் அறுவை சிகிச்சைக்கு பல லட்சம் செலவாகும் நிலை ஏற்பட்டது.

இதனால் சிறுவனின் பெற்றோர் புஷ்பராஜ், ரேணுகாதேவி அரசு மருத்துவமனைக்கு சிறுவனை சிகிச்சைக்கு அழைத்து சென்றனர். ஆனால் அங்கு முதலமைச்சா் மருத்துவ காப்பீட்டு திட்ட அட்டை இருந்தால், சிறுவனுக்கு இலவச சிகிச்சை செய்ய முடியும் எனக் கூறியுள்ளனர்.

மருத்துவ உதவி கேட்டவருக்கு உடனடியாக உதவிய சுகாதாரத்துறை அமைச்சர்

இவர்களிடம் மருத்துவ காப்பீட்டு திட்ட அட்டை இல்லை. அதோடு கோவிலம்பாக்கத்திற்கு வீடு மாறி சென்றுவிட்டதால், ரேஷன் அட்டையும் இல்லை என்று கூறப்படுகிறது.

அமைச்சர் உதவி

இந்தநிலையில் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சா் மா.சுப்ரமணியன் இன்று விமானத்தில் சென்னையிலிருந்து திருச்சி சென்றாா். இதையறிந்த சிறுவன் நவீனின் பெற்றோா், சிறுவனை அழைத்துக் கொண்டு சென்னை விமான நிலையம் சென்றனர். விமானநிலையத்தில் அமைச்சரை சந்தித்து, தங்களது 10 வயது மகனின் சிறுநீரக பாதிப்பு பிரச்னைக்கு தேவையான சிகிச்சைக்கு உதவும்படி கோரினா்.

அவா்களின் பிரச்னையை விளக்கமாக கேட்ட அமைச்சா், உடனடியாக அருகிலிருந்த மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அலுவலர்களுக்கு பரிந்துரைத்து சிறுவனுக்கு உடனடியாக மருத்துவ சிகிச்சைக்கு ஏற்பாடுகளை செய்யும்படி கூறினாா்.

அதோடு அமைச்சா் மா.சுப்ரமணியன் ராஜீவ்காந்தி அரசு பொதுமருத்துவமனை தலைமை மருத்துவரை செல்போனில் தொடா்பு கொண்டு சிறுவனின் சிகிச்சை தொடர்பாக பேசினார்.

இதையும் படிங்க: கோமாவில் உள்ள இளைஞர் சிகிச்சைக்கு செவிசாய்க்குமா அரசு?

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.