சென்னை: இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில்,
* பள்ளி,கல்லூரி,மற்றும் பாலிடெக்னிக் வளாகம் மற்றும் வகுப்பறைகளில் கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்யப்படவேண்டும்.
*வகுப்பறைகளில் சமூக இடைவெளியை கடைபிடிக்கும் வகையில் இருக்கைகள் இடம் விட்டுப் போடப்பட வேண்டும்.
* மாணவர்கள் கைகளை சுத்தப்படுத்திக் கொள்வதற்காகப் பள்ளி நுழைவு வாயில் கிருமிநாசினி வைக்க ஏற்பாடு செய்யப்பட வேண்டும்.
* மாணவர்களுக்கு வளாகத்தின் நுழைவு வாயிலே உடல் பரிசோதனை செய்யவேண்டும்.
* மாணவர்கள் அடிக்கடி கைகளை சுத்தம் செய்து கொள்ள வேண்டும், மாணவர்கள் மதிய வேளை உணவு அருந்தும்போது தனித்தனியே சமூக இடைவெளியுடன் உணவு உண்ண வேண்டும்.
* கரோனாத் தொற்று அறிகுறி உள்ள மாணவர்களுக்கு உடனடியாக தொற்றுப் பரிசோதனை செய்யப்பட வேண்டும்.
* நோய்க் கட்டுப்படுத்தப்படாத பகுதியில் உள்ள மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கட்டாயம் பள்ளி பாலிடெக்னிக் மற்றும் கல்லூரிகளுக்கு வரக்கூடாது.
15 வயதிற்கு மேற்பட்ட வயதுடைய மாணவர்களும், ஆசிரியர்களும் கண்டிப்பாக தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா .சுப்பிரமணியன் அறிவுறுத்தியுள்ளார்.
இதையும் படிங்க:தமிழ்நாட்டில் இன்று முதல் பள்ளி, கல்லூரிகள் திறப்பு