தமிழ்நாட்டில் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளுக்கு வரும் புறநோயாளிகளின் விபரங்கள் சுகாதார தகவல் மேலாண்மை திட்டத்தின் கீழ் பதிவு செய்யப்படுகின்றன. இதற்காக மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளுக்கு பதிவு எண்ணுடன் புற நோயாளி சீட்டு வழங்கப்படுகிறது.
அதனைப் பெற்றுக் கொள்ளும் புறநோயாளிகள், அவர்கள் நோய் சம்பந்தப்பட்ட மருத்துவரை சந்திக்கின்றனர். அவரை பரிசோதனை செய்யும் மருத்துவரும் பரிசோதிக்கிறார். இதில் நோயாளிக்கு சிகிச்சை அளிப்பதற்காக தேவைப்படும் ரத்தம், சிறுநீர் உள்ளிட்ட பரிசோதனை குறித்தும், தேவைப்படும் எக்ஸ்ரே, ஸ்கேன் உள்ளிட்டவை குறித்தும் அந்த நோயாளியின் பதிவு எண் அடங்கிய இணையதளத்தில் பதிவேற்றம் செய்கின்றனர்.
அதனைத் தொடர்ந்து நோயாளி, ஆய்வகங்களுக்கு அங்கு செய்யப்படும் பரிசோதனை முடிவுகளையும் நோயாளியின் பதிவு எண் கொண்ட இணையதள பக்கத்தில் மீண்டும் பதிவிடுகிறார் ஆய்வாளர்.
இதன் மூலம் முதல்நாள் வரும் நோயாளி மறுநாள் வரும்போது புறநோயாளிகள் பிரிவில் சென்று அந்த நோயாளியின் விபவரத்தை பெற்று வர தேவையில்லை. நோயாளியின் எண்ணைக் கொண்டே மருத்துவரை பார்க்கலாம், மீண்டும் வரும் மருத்துவ விபரங்களையும் குறிப்பிடலாம். அதுமட்டுமின்றி நோயாளிக்கு தேவையான மருந்துகளை பெற மருந்தகத்திற்கு நோயாளி சீட்டுடன் சென்றால் மருந்துகள் வழங்கப்படும். இந்த முறையினால் ஒரு நோயாளிக்கு பல்வேறு பிரிவுகளில் சிகிச்சை அளிக்கப்பட்டாலும் அது குறித்து முழு விபரமும் எளிதாக தெரிந்து கொள்ள முடியும்.
இந்த திட்டம் சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் பதியப்பட்டு வருகிறது. இந்த திட்டத்திற்கு நோயாளிகள், மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு ஏற்பட்டுள்ளது.
மேலும், இத்திட்டம் குறித்து தமிழ்நாடு தகவல் தொழில்நுட்பத் துறை சார்பாக தெரிவிக்கையில், வருங்கால பயன்பாட்டிற்காகவும், ஆராய்ச்சிகளுக்காகவும் இந்த தகவல்கள் சேமிக்கப்படுவதாகத் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க... கீழடி ஆய்வுக்குக் காமராசர் பல்கலை. 1 கோடி ரூபாய் ஒதுக்கீடு: துணைவேந்தர் தகவல்!