சமூக வலைதளங்களில் நடிகை வனிதாவின் திருமணம் குறித்து அவதூறாகப் பேசி, காணொலியைப் பரப்பியதாக சூர்யா தேவியை காவல் துறையினர் சில நாள்களுக்கு முன்பு கைது செய்தனர்.
அப்போது நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கு முன்பு, சூர்யா தேவி உள்பட அவரைக் கைது செய்த காவல் துறையினருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. பின்னர் சூர்யா தேவிக்கு பிணை வழங்கி நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.
இந்த நிலையில் நேற்று (ஜூலை 26) வெளியான கரோனா பரிசோதனையின் முடிவில், சூர்யா தேவி மற்றும் ஆய்வாளர் ஒருவருக்கு கரோனா தொற்று இருப்பதாக தெரியவந்தது. இதனால் சுகாதாரத்துறையினர் சாலிகிராமத்தில் உள்ள சூர்யா தேவியின் வீட்டிற்குச் சென்று, சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல முயன்றுள்ளனர்.
ஆனால், குறிப்பிட்ட முகவரியில் சூர்யா தேவி இல்லாததால், வீட்டின் வாசலில் தலைமறைவாக உள்ளதாக எழுதிவிட்டுச் சென்றுள்ளனர். மேலும் சுகாதாரத்துறையினர் விருகம்பாக்கம் காவல் நிலையத்திலும் புகார் அளித்துச் சென்றுள்ளனர்.
இந்தப் புகாரின் அடிப்படையில் தலைமறைவாக உள்ள சூர்யா தேவியை காவல் துறையினர் தேடி வருகின்றனர். இதற்கிடையில் சூர்யா தேவி தனக்கு கரோனா இல்லை எனவும்; கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டால் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொள்வதாகவும் ஆவேசமாகப் பேசி காணொலி ஒன்றைப் பதிவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: வனிதா மன்னிப்பு கேட்கும் வரை வீடியோ வெளியிடுவேன் - சூர்யா தேவி பரப்பரப்பு பேட்டி!