ETV Bharat / state

12ஆம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கு HCL நிறுவனத்தில் பயிற்சி - இன்டர்ன்ஷிப் HCL

தமிழ்நாட்டில் 2021, 2022ஆம் ஆண்டுகளில் 12ஆம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கு HCL நிறுவனத்தில் பயிற்சி அளிக்கப்படுகிறது.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Oct 29, 2022, 7:25 AM IST

சென்னை: இதுகுறித்து தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழக மேலாண்மை இயக்குநர் வெளியிட்ட செய்திக் குறிப்பில், “தமிழ்நாட்டில் 2021, 2022 ஆண்டுகளில் 12ஆம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கு HCL, தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம், தமிழ்நாடு பள்ளிக்கல்வி இயக்குநரகம் இணைந்து வழங்கும் வேலைவாய்ப்புடன் கூடிய ஓராண்டு பயிற்சி திட்டம் வழங்கப்ப உள்ளது.

2021-2022 ஆம் ஆண்டுகளில் 12ஆம் வகுப்பில் 60% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு, HCL நிறுவனம் பயிற்சியோடு பணி வாய்ப்புகளை வழங்குகின்றது. தமிழ்நாடு அரசின் “நான் முதல்வன்” திட்டத்தின் மூலமாக தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம், அரசுப் பள்ளி மாணவர்கள் 2,000 நபர்களுக்கு HCL Techbee ”Early Career Program”-க்கான பயிற்சி கட்டணம் முழுவதையும் வழங்குகின்றது. தமிழ்நாட்டின் எந்த பகுதியில் இருந்தாலும் பயிற்சியோடு HCL Technologies-யில் முழுநேர பணிவாய்ப்பை வழங்குகின்றது. Internship பயிற்சியின்போது 7வது மாதம் முதல், மாதம்தோறும் ரூ.10,000/- உதவித்தொகையை பெறலாம்.

ஐடி துறையில் வேலைவாய்ப்பு: பணியில் சேர்ந்தவுடனே துவக்க நிலை ஊதியமாக ஆண்டுக்கு ரூ.1.70 லட்சம் முதல் 2.20 லட்சம் வரை (பணிநிலைக்கு ஏற்றாற்போல்) வழங்கப்படும். HCL Technologies நிறுவனத்தில் பணிபுரிந்து கொண்டே உயர்கல்வியை துவங்குவதற்கு BITS Pilani, Amity மற்றும் SASTRA பல்கலைக்கழகங்களில் வாய்ப்பினை பெற்றுத் தருகின்றது. மாணவர்களின் கல்விக் கட்டணத்தின் ஒரு பகுதியை HCL Technologies நிறுவனம் வழங்குகின்றது. இத்திட்டமானது மாணவர்கள் சிறுவயதிலேயே உலகளாவிய தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் தங்கள் பணியினை தொடங்க வாய்ப்பளிக்கின்றது.

மாநிலம் முழுவதிலும் இந்த HCL “Techbee” திட்டத்தின் தேர்வு முகாமினை அக்டோபர் 28 முதல் 30 ஆம் தேதி வரை, சென்னை, மதுரை, திருநெல்வேலி, திருச்சி மற்றும் ஈரோடு ஆகிய மாவட்டங்களில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் தகுதியுள்ள மாணவர்களை சேர்ந்து பயன்பெற வேண்டும்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: பணம் பறித்துக்கொண்டு கைவிட்ட உறவினர் - பார்வையற்ற மூதாட்டியிக்கு ஆதரவளித்த ஆணையர்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.