ETV Bharat / state

மருத்துவ மாணவர்களின் விவரங்கள் தேசிய தேர்வு முகமையிடம் ஒப்படைக்க உத்தரவு! - நீட் ஆள்மாறாட்டம் வழக்கு

சென்னை: அரசு, தனியார் மருத்துவ கல்லூரிகள், நிகர்நிலை பல்கலைகழகங்களில் மருத்துவ படிப்பில் சேர்ந்துள்ள மாணவர்களின் விவரங்களை தேசிய தேர்வு முகமையிடம் வழங்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

neet
author img

By

Published : Oct 25, 2019, 10:03 PM IST

நீட் ஆள்மாறாட்டம் தொடர்பாக அரசு மருத்துவ மாணவர்களின் கைரேகை பதிவுகளை சிபிசிஐடியிடம் வழங்க நீதிபதி கிருபாகரன் அமர்வு உத்தரவிட்டிருந்தது. இந்த வழக்கு இன்று மீண்டும் நீதிபதிகள் கிருபாகரன், வேல்முருகன் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. இந்தாண்டு மருத்துவ படிப்பில் சேர்ந்துள்ள மாணவர்களின் விவரங்கள், கைரேகைகளை வரும் அக்டோபர் 30ஆம் தேதிக்குள் தேசிய தேர்வு முகமைக்கு வழங்க அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகள், நிகர்நிலை பல்கலைகழகங்களுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள் அவற்றை நவம்பர் 4ஆம் தேதிக்குள் சிபிசிஐடியிடம் வழங்க தேசிய தேர்வு முகமைக்கு உத்தரவிட்டனர்.

மேலும், வருமான வரித்துறை நடத்திய சோதனையில் நாமக்கல் மற்றும் பெங்களூரு நீட் பயிற்சி மையங்களில் அதிகளவில் பணம் கைப்பற்றப்பட்டுள்ளதால், வருமான வரித்துறையின் இயக்குனரை வழக்கில் இணைத்து, நவம்பர் 4ஆம் தேதிக்குள் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

இதையும் படிங்க: நீட் தேர்வு ஆள்மாறட்ட வழக்கு: 4 பேருக்கு 15 நாள் காவல் நீட்டிப்பு!

Intro:Body:அரசு, தனியார் மருத்துவ கல்லூரிகள் மற்றும் நிகர்நிலை பல்கலைகழகங்களில் மருத்துவ படிப்பில் சேர்ந்துள்ள மாணவர்களின் விபரங்கள், கைரேகைகளை தேசிய தேர்வு முகமையிடம் வழங்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நீட் ஆள்மாறாட்டம் தொடர்பாக அரசு மருத்துவ மாணவர்களின் கைரேகை பதிவுகளை சிபிசிஐடியிடம் வழங்க நீதிபதி கிருபாகரன் அமர்வு உத்தரவிட்டிருந்தது.

இந்த வழக்கு இன்று மீண்டும் நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் வேல்முருகன் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.

அப்போது, தங்கள் கல்லூரியில் இந்தாண்டு மருத்துவம் பயின்று வரும் மாணவர்களின் விபரங்களை தேசிய தேர்வு முகமைக்கு வழங்க தயாராக இருப்பதாக சவிதா நிகர்நிலை பல்கலைக்கழகம் மற்றும் கிறிஸ்துவ மருத்துவ கல்லூரியில் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து, இந்தாண்டு மருத்துவ படிப்பில் சேர்ந்துள்ள மாணவர்களின் விபரங்கள் மற்றும் கைரேகைகளை வரும் அக்டோபர் 30-ம் தேதிக்குள் தேசிய தேர்வு முகமைக்கு வழங்க அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகள், நிகர்நிலை பல்கலைகழகங்களுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள் அவற்றை நவம்பர் 4-ம் தேதிக்குள் சிபிசிஐடியிடம் வழங்க தேசிய தேர்வு முகமைக்கு உத்தரவிட்டனர்.

மேலும், வருமான வரித்துறை நடத்திய சோதனையில் நாமக்கல் மற்றும் பெங்களூருவில் உள்ள தனியார் நீட் பயிற்சி மையங்களில் அதிகளவில் பணம் கைபற்றப்பட்டுள்ளதால், வருமான வரித்துறையின் இயக்குனரை தாமாக முன் வந்து இந்த வழக்கில் இணைத்து நீதிபதிகள் மனு குறித்து வருமான வரித்துறை பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை நவம்பர் 4-ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.