தூத்துக்குடி மக்களவை உறுப்பினர் கனிமொழியின் வெற்றியை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் இரண்டு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. இதனால் தூத்துக்குடி தொகுதியில் பயன்படுத்தப்பட்ட மின்னனு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பத்திரப்படுத்தி வைக்கப்பட்டிருந்தன.
இந்நிலையில், தேர்தல் வாக்கு எண்ணிக்கை குறித்தோ, மின்னணு இயந்திரங்கள் குறித்தோ எந்த புகாரும் தெரிவிக்கப்படாததால் வேறு தேர்தல்களுக்கு பயன்படுத்தும் வகையில் இந்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை விடுவிக்கக் கோரி தேர்தல் ஆணையம் தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி எஸ்.எம் சுப்பிரமணியம், தூத்துக்குடி மக்களவைத் தேர்தலில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை விடுவிக்க தேர்தல் ஆணையத்திற்கு அனுமதியளித்து, பிரதான தேர்தல் வழக்குகளை அடுத்த வாரத்திற்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.
இதையும் படிங்க: தாழ்த்தப்பட்டவரின் உடலை எப்படி எடுத்துச் செல்ல வேண்டும்? நீதிமன்றம் தீர்ப்பு