ETV Bharat / state

ஆர்எஸ் பாரதிக்கு எதிரான கூட்டுறவு சங்க முறைகேடு வழக்கு - 4 வாரத்தில் முடிக்க உத்தரவு - கூட்டுறவு சங்க நிதியில் முறைகேடு

சென்னை: கூட்டுறவு சங்க நிதியில் 7 லட்சம் ரூபாய் முறைகேடு செய்ததாக, திமுக எம்.பி ஆர்.எஸ் பாரதிக்கு எதிரான புகார் மீதான விசாரணையை 4 வாரத்தில் முடிக்க வேண்டுமென சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

DMK MP RS Bharathi
திமுக எம்.பி. ஆர்எஸ் பாரதி
author img

By

Published : Oct 12, 2020, 10:50 PM IST

கடந்த 1996 முதல் 2001ஆம் ஆண்டு வரை நங்கநல்லூர் கூட்டுறவு கட்டட சங்கத் தலைவராக இருந்த தற்போதைய திமுக நாடாளுமன்ற உறுப்பினரும், அக்கட்சியின் அமைப்பு செயலாளருமான ஆர்.எஸ் பாரதி, நங்கநல்லூர் கூட்டுறவு கட்டட சங்கத்தின் மூலம் வணிக வளாகம் கட்டியதில் 7 லட்சத்து 64 ஆயிரத்து 577 ரூபாய் முறைகேடு செய்ததாகக் கூறி, கூட்டுறவு சங்கங்களின் சட்டப்படி நடவடிக்கை எடுக்க கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் உத்தரவிட்டிருந்தார்.

இந்த முறைகேடு தொடர்பாக ஆர்.எஸ் பாரதி உள்ளிட்ட முன்னாள் நிர்வாகிகளுக்கு கடந்த 2004ஆம் ஆண்டு செங்கல்பட்டு மாவட்ட கூட்டுறவு சங்க துணை பதிவாளர் சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

இந்த விசாரணையில் எந்த முன்னேற்றமும் இல்லை என, முறைகேடு தொடர்பான விசாரணையை ஆறு மாத காலங்களுக்குள் முடிக்க செங்கல்பட்டு மாவட்ட கூட்டுறவு சங்க துணை பதிவாளருக்கு உத்தரவிடக் கோரி, நங்கநல்லூர் கூட்டுறவு கட்டட சங்கத்தின் தற்போதைய தலைவர் வி.பரணிதரன், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், முறைகேடு தொடர்பான விசாரணையை 8 வார காலங்களில் முடித்து, அதன் அறிக்கையை அக்டோபர் 12ஆம் தேதிக்குள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டது.

இதைத்தொடர்ந்து இவ்வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன் இன்று விசாரணைக்கு வந்தபோது, நீதிமன்ற உத்தரவை அமலப்படுத்த கூடுதல் அவகாசம் வேண்டுமென கோரப்பட்டது.

ஏற்கெனவே போதுமான கால அவகாசம் வழங்கிய நிலையில், கூடுதலாக அவகாசம் கேட்பது ஏற்புடையதல்ல என தெரிவித்த நீதிபதி, 4 வாரத்துக்குள் ஆர்.எஸ் பாரதி மீதான புகார் குறித்து விசாரித்து நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டுமெனவும், தவறும் பட்சத்தில் செங்கல்பட்டு மாவட்ட கூட்டுறவு சங்க துணை பதிவாளர் நேரில் ஆஜராக வேண்டுமெனவும் எச்சரித்து வழக்கு விசாரணையை ஒத்தி வைத்தார்.

இதையும் படிங்க: கல்லூரிகளில் ஷிப்ட் முறை நேரில் ஆஜராக நேரிடும் - உயர் நீதிமன்றம் எச்சரிக்கை!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.