ETV Bharat / state

கரோனா எதிரோலி: தொலைபேசியில் வழக்கை விசாரித்து 23 பேருக்கு இடைக்கால பிணை!

சென்னை: கரோனா வைரஸ் அச்சுறுத்தலால் ஊரடங்கு ஏதிரோலி காரணமாக தொலைபேசி மூலமாக வழக்கை விசாரித்து 23 பேருக்கு இடைக்கால பிணை வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

HC hear bail cases through telephone, 23 accused got bail

author img

By

Published : Mar 27, 2020, 3:56 PM IST

கரோனா வைரஸ் அச்சுறுத்தலால் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால், முக்கிய வழக்குகளை தவிர பிற வழக்கு விசாரணை தொடர்பாக நீதிமன்றம் மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவில்லை.

இந்நிலையில், பிணை கேட்டும், ஏற்கனவே பெற்ற பிணையில் விதிக்கப்பட்ட நிபந்தனையை தளர்த்த கோரியும் தாக்கல் செய்யப்பட்ட அவசர வழக்குகள் நீதிபதி ஏ.டி. ஜெகதீஷ்சந்திரா முன்பு விசாரணைக்காக பட்டியலிடப்பட்டிருந்தது. உயர்நீதிமன்றம் மூடப்பட்டிருப்பதால், இந்த வழக்குகளை நீதிபதி தன் வீட்டில் இருந்தபடியே விசாரித்தார்.

அப்போது அரசு தரப்பில் குற்றவியல் வழக்கறிஞர் கருத்தையும் கேட்கும் விதமாக தொலைபேசியில், குற்றவியல் வக்கீல் பிரபாகரனிடம், நீதிபதி வழக்கு குறித்து கருத்து கேட்டார். அவர் தெரிவித்த பதிலின் அடிப்படையில், 58 வழக்குகளை விசாரித்தார். இதில், கொலை, கொலை முயற்சி, தற்கொலைக்கு தூண்டுதல் ஆகிய குற்றச்சாட்டுகளில் சிக்கிய 23 பேருக்கு இடைக்கால பிணை வழங்கி நீதிபதி ஏ.டி. ஜெகதீஷ்சந்திரா உத்தரவிட்டார்.

இவர்களுக்கு ஏப்ரல் 27ஆம் தேதி வரை இடைக்கால பிணை வழங்குவதாகவும், அதனால் சம்பந்தப்பட்ட சிறை அலுவலர்கள் இவர்களை விடுவிக்கவேண்டும் என்றும் இதற்காக இடைக்கால பிணை பெற்ற 23 பேரும் தலா 10 ஆயிரம் ரூபாய்க்கான சொந்த பிணை வழங்கவேண்டும் என்று நீதிபதி ஏ.டி. ஜெகதீஷ்சந்திரா தனது உத்தரவில் கூறியுள்ளார்.

மேலும், ஏற்கனவே பெற்ற பிணையில் விதிக்கப்பட்ட நிபந்தனைகளை தளர்த்த வேண்டும் என்று வெவ்வேறு வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்ட 3 பேர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதி, மூவரின் பிணை நிபந்தனைகளையும் தளர்த்தி உத்தரவிட்டார்.

இதையும் படிங்க...தமிழ்நாட்டில் மேலும் ஆறு பேருக்கு கரோனா பாதிப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.