ETV Bharat / state

ஹவாலா பணம் கடத்தியவருக்கு ஏழு ஆண்டுகள் சிறைத் தண்டனை; ரூ.1 கோடி அபராதம்

ஹவாலா பணம் கடத்தியவருக்கு ஏழு ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ஒரு கோடி ரூபாய் அபராதமும் விதித்து சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஏழு ஆண்டுகள் சிறை தண்டனை
ஏழு ஆண்டுகள் சிறை தண்டனை
author img

By

Published : Nov 2, 2021, 10:55 PM IST

சென்னை: அங்கப்பன்நாயக்கன் தெருவைச் சேர்ந்தவர், லியாகத் அலி. இவர் 2016ஆம் ஆண்டு துபாய் உள்ளிட்ட நாடுகளில் இருந்து பல கோடி மதிப்புள்ள மின்னணு சாதனங்களை சரக்கு விமானங்கள், கப்பல்கள் மூலமாக இறக்குமதி செய்தார்.

போலி ஆவணங்கள் தயாரித்து கணக்கில் வராத ஹவாலா பணம் சுமார் 18 கோடியே 66 லட்சத்து 54 ஆயிரம் ரூபாயை வெளி நாடுகளுக்கு கடத்தினார்.

இது குறித்து சென்னை மண்டல மத்திய அமலாக்கத்துறையினர் விசாரணை நடத்தி லியாகத் அலியைக் கைது செய்தனர். இந்த வழக்கை விசாரித்த சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி திருவேங்கட சீனிவாசன், லியாகத் அலி மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டுள்ளதாகக் கூறி அவருக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ஒரு கோடி ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

மேலும் லியாகத் அலியிடம் இருந்து முடக்கம் செய்யப்பட்ட ஒரு கோடியே 75 லட்சம் ரூபாயை அரசுடமையாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் நீதிபதி தெரிவித்தார்.

இதையும் படிங்க: நாமக்கல் மாவட்ட ஆட்சியருக்குப் பிடிவாரண்ட்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.