ETV Bharat / state

விஜய் ஹசாரே டிராபி : தமிழகத்தை வீழ்த்தி அரியானா முதல் முறையாக இறுதி போட்டிக்கு தகுதி! - விஜய் ஹசாரே

Vijay Hazare trophy : விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட் தொடரின் அரைஇறுதி ஆட்டத்தில் தமிழகத்தை 63 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அரியானா அணி முதல் முறையாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 13, 2023, 10:44 PM IST

ராஜ்கோட் : விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட் தொடர் கடந்த நவம்பர் 23ஆம் தேதி தொடங்கி நாட்டின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. குரூப் மற்றும் கால் இறுதி சுற்று நிறைவு பெற்ற நிலையில் அதில், தமிழ்நாடு, அரியானா, ராஜஸ்தான், கர்நாடகா ஆகிய நான்கு அணிகள் நாக்-அவுட் சுற்றான அரைஇறுதிக்கு முன்னேறியது.

இந்நிலையில், குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் நடைபெற்ற முதலாவது அரைஇறுதி போட்டியில் தமிழ்நாடு - அரியானா அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற அரியானா அணியின் கேப்டன் அசோக் மெனாரியா பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி அந்த அணியின் இன்னிங்சை யுவராஜ் யோகேந்தர் சிங் மற்றும் அங்கித் குமார் ஆகியோர் தொடங்கினர்.

அபாரமாக விளையாடிய யுவராஜ் சிங், தமிழக பந்துவீச்சாளர்களுக்கு கடுமையான நெருக்கடி கொடுத்தார். அதேநேரம் அங்கித் குமார் 12 ரன்களில் ஆட்டமிழந்தார். இதையடுத்து களமிறங்கிய ஹிமான்சு ராணா, யுவராஜுடன் கூட்டணி அமைத்து தமிழக வீரர்களுக்கு குடைச்சல் கொடுத்தனர்.

அபாரமாக விளையாடிய இருவரும் ஏதுவான பந்துகளை எல்லைக் கோட்டுக்கு அனுப்பி அணியின் ரன் விகிதத்தை சீரான இடைவெளியில் உயர்த்தினர். அபாரமாக விளையாடிய யுவராஜ் சிங் 65 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். மறுபுறம் சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும், ராணா நிலைத்து நின்று விளையாடி சதம் விளாசினார்.

மறுபுறம் நிஷாந்த் சித்து 8 ரன், விக்கெட் கீப்பர் ரோகித் சர்மா 17 ரன், கேப்டன் அசோக் மெனரியா 1 ரன் அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேறினர். 50 ஓவர்கள் முடிவில் அரியானா அணி 7 விக்கெட் இழப்புக்கு 293 ரன்கள் விளாசியது. ஹிமான்சு ராணா மட்டும் 116 ரன்கள் குவித்தார். தமிழக அணி தரப்பில் நடராஜன் 3 விக்கெட்டுகளையும், சாய் கிஷோர், வருண் சக்கரவர்த்தி ஆகியோர் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

தொடர்ந்து 294 ரன்கள் இலக்கை நோக்கி தமிழக அணி களமிறங்கியது. தமிழக அணிக்கு தொடக்கம் பெரிய அளவில் அமையவில்லை. பாபா அபராஜித் 7 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய ஹரி நிஷாந்த் 1 ரன் மட்டும் எடுத்து நீண்ட நேரம் நீடிக்கவில்லை.

இதனிடையே களமிறங்கிய விஜய் சங்கர் ஆறுதல் அளிக்கும் 23 ரன்கள் எடுத்து வெளியேறினார். மறுபுறம் நீண்ட நேரம் விளையாடி நாராயண் ஜெகதீசன் 30 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ஒருபுறம் விக்கெட்டுகள் மளமளவென சரியத் தொடங்கின. நீண்ட நேரம் போராடிய பாபா இந்திரஜித் மட்டும் 64 ரன்கள் குவித்து ஆறுதல் அளித்தார்.

கடைசி எதிர்பார்ப்பாக இருந்த கேப்டன் தினேஷ் கார்த்திக்கும் 31 ரன்கள் மட்டும் எடுத்து வெளியேறினார். 47 புள்ளி 1 ஓவர்கள் முடிவில் தமிழக அணி 230 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. நடராஜன் மட்டும் 4 ரன்களுடன் அவுட்டாகாமல் கடைசி வரை களத்தில் இருந்தார்.

அரியானா அணி தரப்பில் அன்சுல் கம்போஜ் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ராகுல் திவேதியா 2 விக்கெட்டுகளும், சுமித் குமார், ஹர்ஷல் பட்டேல், நிஷாந்த் சித்து ஆகியோர் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். இதன் மூலம் அரியானா அணி 63 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று முதல் முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

இதையும் படிங்க : அர்ஜூனா விருதுக்கு முகமது ஷமியின் பெயர் பரிந்துரை - பிசிசிஐ தகவல்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.