ETV Bharat / state

ஹர்தாஸ் பாலியல் வழக்கு: குற்றவாளிகளை கைது செய்யக்கோரி ம.ம.க., சார்பில் ஆர்ப்பாட்டம்! - மனிதநேய மக்கள் கட்சி

சென்னை : உத்தரப் பிரதேசத்தில் பட்டியலின பெண்ணைக் கற்பழித்து கொலைசெய்த வெறியர்களுக்குத் தண்டனை வழங்கவும், குற்றவாளிகளைக் காப்பாற்ற முயலும் பிஜேபி யோகி அரசைக் கண்டித்தும் பல்லாவரத்தில் மனிதநேய மக்கள் கட்சி சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

hardas-sex-case-demonstration-on-behalf-of-the-mmk-demanding-the-arrest-of-the-culprits

author img

By

Published : Oct 7, 2020, 9:48 PM IST

உத்தரப் பிரதேசத்தில் பட்டியலின பெண்ணைக் கொடூரமான முறையில் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து கொலைசெய்த வெறியர்களை தூக்கிலிடக் கோரியும் குற்றவாளிகளைக் காப்பாற்ற முயலும் பிஜேபி யோகி அரசைக் கண்டித்தும் சென்னை பல்லாவரம் பகுதியில் மனிதநேய மக்கள் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அக்கட்சியின் தலைவர் எஸ்.கே.ஜாகிர் உசேன் தலைமையில் நடைபெற்ற இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில், மாநில பொதுச் செயலாளர் ப.அப்துல் சமது, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மாநில துணை பொதுச் செயலாளர் வன்னியரசு, மனிதநேய மக்கள் கட்சி மாநில துணைப் பொதுச் செயலாளர் எம்.யாக்கூப், தலைமை நிர்வாக்குழு உறுப்பினர் ஆர்.எம்.ஹனிபா ஆகியோர் கலந்துகொண்டனர். மேலும், இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் மத்திய அரசுக்கு எதிராகவும், உத்தரப் பிரதேச அரசுக்கு எதிராகவும் கண்டன கோஷங்களை எழுப்பினர்.

குற்றவாளிகளை கைது செய்யக்கோரி ம.ம.க., சார்பில் ஆர்ப்பாட்டம்

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மனிதநேய மக்கள் கட்சியின் பொதுச் செயலாளர் அப்துல்சமது, உ.பி பாலியியல் கொலை வழக்கில் சம்பந்தபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும். உ.பி அரசு மீது குடியரசு தலைவர் நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும். ராகுல்காந்தி மீது தாக்குதல் நடத்திய காவல் துறையினர் மீதும் நடவடிக்கைகள் எடுத்திட வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.

இதையும் படிங்க:14 வயது சிறுமியை திருமணம் செய்த இளைஞர் போக்சோ சட்டத்தில் கைது!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.