பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு துறை கோவிட்-19 குறித்து அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அறிவிப்பில் “கரோனா வைரஸ் நோய் தமிழ்நாடு பொது சுகாதாரத் சட்டம் 1939 பொது சுகாதாரத் துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டிய தொற்றுநோயாக அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழ்நாடு முழுவதும் கரோனா வைரஸ் தொற்று பரவும் அபாயம் உள்ள பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. கொள்ளைநோய் சட்டம் 1897யின் படி வழிகாட்டும் நெறிமுறைகள் அளிக்கப்பட்டுள்ளன.
அரசு, தனியார் அலுவலகங்கள், மருத்துவமனைகள், அடுக்குமாடி குடியிருப்புகள், பள்ளிகள், கல்லூரிகள், திருமண மண்டபங்கள், பொழுதுபோக்கு பூங்காக்கள், திரையரங்குகள், வணிக வளாகங்கள், வழிபாட்டுத்தலங்கள், தொழில் நிறுவனங்கள், தொழிற்சாலைகள் உள்ளிட்ட இடங்களில் குறிப்பாக மாணவர்கள் மற்றும் பணிபுரிபவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப தேவையான அளவு தண்ணீர் குழாய்கள் மற்றும் வாஸ்பேஷன் அமைக்கப்பட வேண்டும்.
மேலும் திரவ சோப்பு கரைசல் அல்லது கை கழுவும் சோப்பு வைக்கப்படவேண்டும். கட்டிடத்திற்குள் நுழையும் முன்பும், வெளியில் செல்லும் முன்பும் கைகளை நன்கு கழுவிய பிறகே அனுமதிக்க வேண்டும் உள்ளிட்ட விதிமுறைகளை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து பொது சுகாதாரத்துறை இயக்குனர் குழந்தைசாமி துறை தலைவர்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், பொது சுகாதாரத் துறை அறிவித்துள்ளது. அதிக அளவில் மக்கள் கூடும் இடங்களான அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள், மருத்துவமனைகள், அடுக்குமாடி குடியிருப்புகள், பள்ளிகள், கல்லூரிகள், திருமண மண்டபங்கள், திரையரங்குகள், பொழுதுபோக்கு பூங்காக்கள், நிறுவனங்கள் ஆகிய இடங்களில் கட்டடங்களில் முன்புறம் கை கழுவுவதற்கான வசதிகளை ஏற்படுத்த வேண்டும். அதற்கான ஏற்பாடுகளை துறைத்தலைவர்கள் மேற்கொள்ள வேண்டும் என்றும் இது போன்ற வசதிகள் ஏற்படுத்தப்படும் சுகாதாரத் துறை அலுவலர்கள் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் எனவும் அதில் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க...கரோனா தொகுப்பு: தள்ளாடும் எஸ்.பி.ஐ.!