ETV Bharat / state

கை அறுக்கப்பட்ட கிருஷ்ணர் சிலையை விற்க முயன்ற இருவர் கைது!

சென்னை: கை அறுக்கப்பட்ட நிலையில் இருந்த கிருஷ்ணர் சிலையை விற்க முயன்ற இருவரை சிலை திருட்டு தடுப்புப் பிரிவு காவல்துறையினர் கைது செய்தனர்.

hand cut krishna idol thieves arrested by police

author img

By

Published : Mar 15, 2020, 7:19 PM IST

சென்னை திரிசூலத்தில் இருந்து ஜி.எஸ்.டி சாலை நோக்கி செல்லும் வழியில், டி.எஸ்.பி சுந்தரம் தலைமையிலான சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு காவல்துறையினர் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, இரு சக்கர வாகனத்தில் வந்த இருவர் முன்னுக்கு பின் முரணாக பேசியதன் அடிப்படையில், அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தினர்.

விசாரணையில் இருவரும் திரிசூலத்தைச் சேர்ந்த மாசிலாமணி, பல்லாவரத்தைச் சேர்ந்த சுரேஷ் என்பது தெரியவந்தது. அவர்கள் பையில் ஒரு அடி உயரமுள்ள பீடத்துடன் கூடிய கிருஷ்ணர் சிலையின் ஒரு கை அறுக்கப்பட்ட நிலையில் இருந்ததும், அதனை விற்பதற்காக இருவரும் எடுத்துச் சென்றதும் தெரியவந்தது.

விசாரணைக்குப் பின்னர், அவர்களிடமிருந்து சிலையையும், இரு சக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க... அரசு டாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்து திருடமுயற்சி

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.