ஜூன் 15ஆம் தேதி முதல் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து தேர்வுக்கான முன் ஏற்பாடுகள் அனைத்தையும் பள்ளிக்கல்வித்துறை செய்து வருகிறது.
இதனிடையே தமிழ்நாடு முழுவதும் பத்தாம் வகுப்பு தேர்வு எழுதும் மாணவர்களுக்கு ஹால் டிக்கெட் இன்று முதல் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. சென்னை அசோக் நகரில் உள்ள பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியர் சரஸ்வதி மாணவிகளுக்கு ஹால் டிக்கெட் மற்றும் முகக்கவசங்களை வழங்கினார்.
![thermal check for students and teacher](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/12:15_tn-che-02-public-exam-hall-ticket-mask-script-vedio-7204807_08062020120134_0806f_00768_76.jpg)
முன்னதாக, ஹால் டிக்கெட் பெறுவதற்காக பள்ளிக்கு வருகை தந்த மாணவிகளுக்கு தெர்மல் ஸ்கேனர் மூலம் வெப்ப பரிசோதனை செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து அவர்கள் கைகளில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. பின்னர் தகுந்த இடைவெளியை கடைப்பிடித்து மாணவிகள் தங்களது ஹால் டிக்கெட்டோடு முகக்கவசங்களை வாங்கிச் சென்றனர்.
![Hall ticket issue for SSLC students](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/12:15_tn-che-02-public-exam-hall-ticket-mask-script-vedio-7204807_08062020120134_0806f_00768_282.jpg)
இதுகுறித்து மாணவிகள் கூறும்போது, பாதுகாப்பு முன்னெச்சரிக்கையுடன் ஹால் டிக்கெட், முகக்கவசங்கள் வழங்கப்பட்டன. தேர்வு எழுதுவதற்கு தயாராக இருக்கிறோம். ஊரடங்கு காலத்திலும் ஆசிரியர்கள் ஆன்லைன் மூலம் பாடம் கற்பித்தனர். எனவே தேர்வை நன்றாக எழுதுவோம் என்றனர்.