வெளிநாடுகளிலிருந்து சென்னை விமான நிலையத்திற்கு அதிகளவில் கடத்தல் பொருட்கள் கொண்டு வருவதாக ரகசிய தகவல் கிடைத்ததையடுத்து சுங்கத்துறை அலுவலர்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
அப்போது துபாயிலிருந்து சென்னைக்கு வந்த விமானத்தில் சென்னையைச் சோ்ந்த தாஜுதீன் (29) என்பவரை சந்தேகத்தின்பேரில் நிறுத்தி விசாரித்த சுங்கத் துறையினர், அவர் முன்னுக்குப்பின் முரணாக பேசியதால் அவரின் உடைமைகளை சோதனை செய்தனர். அப்போது உடமைகளில் எதுவும் இல்லாததால், அவரை தனி அறைக்கு அழைத்துச்சென்று உடல் முழுவதும் சோதனை செய்தனர்.
சோதனையில் அவரின் உள்ளாடைக்குள் மறைத்து கடத்தி கொண்டுவரப்பட்ட ரூ. 19.5 லட்சம் மதிப்புடைய 535 கிராம் தங்க கட்டிகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டத்து. இதனையடுத்து தங்க கட்டிகளை பறிமுதல் செய்த சுங்கத்துறை அதிகாரிகள் அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
இதையும் படிங்க: குட்கா பொருள்கள் பதுக்கிய இருவர் கைது!