ETV Bharat / state

திருக்குறளுக்கு புதிய விளக்கம் கொடுத்த ஹெச். ராஜா ட்வீட்டால் சர்ச்சை! - Tweeter Latest News

சென்னை: ‘திருக்குறள் படித்து திருந்தப் பாருங்கள்’ என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் ட்வீட் செய்திருந்த நிலையில், அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாஜக தேசிய செயலாளர் ஹெச். ராஜா ட்வீட் செய்துள்ளார்.

எச்.ராஜா
author img

By

Published : Nov 3, 2019, 10:35 PM IST

கடந்த வெள்ளியன்று தமிழ்நாடு பாஜகவின் ட்விட்டர் பக்கத்தில் வெளியான பதிவு ஒன்று பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. பாஜக இட்ட அந்த பதிவில் காவி உடையணிந்து நெற்றியில் திருநீற்றைப் பூசியிருப்பது போல் திருவள்ளுவரின் படம் பதிவிடப்பட்டிருந்தது.

மானுட நேயத்தைப் போதித்த திருவள்ளுவருக்கு மதச்சாயம் பூசுவது கண்டிக்கத்தக்கது என்று பல்வேறு தரப்பினரும் அந்தப் பதிவிற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

இந்தச்சூழலில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாடு பாஜக இட்ட ட்விட்டர் பதிவிக்கு பதிலடி கொடுக்கும் வகையில் தனது ட்விட்டர் பக்கத்தில் ட்வீட் ஒன்றை இட்டுள்ளார்.

ட்வீட் 3
ட்வீட் 3

அதில், 'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்' என்ற வள்ளுவரை, காவிக்கூட்டம் தனது கட்சிக்கு கச்சை கட்டத் துணைக்கு அழைப்பது தமிழ்த் துரோகம்! எத்தனை வர்ணம் பூசினாலும், உங்கள் வர்ண சாயம் வெளுத்துவிடும். சாயம் பூசுவதை விடுத்து, திருக்குறள் படித்து திருந்தப் பாருங்கள்! என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில், திமுக தலைவர் ஸ்டாலினுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், பாஜக தேசிய செயலாளர் ஹெச். ராஜா சில ட்வீட்டுகளை பதிவிட்டுள்ளார்.

அதில், '972 வது திருக்குறளில் "பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமை யான்" என்று வள்ளுவர் கூறியிருக்கிறார். எல்லா உயிர்க்கும் பிறப்பு ஒருத் தன்மையானதே, ஆயினும் செய்கின்ற தொழில்களின் உயர்வு தாழ்வு வேறுபாடுகளால் சிறப்பியல்பு ஒத்திருப்பதில்லை..’ என பதிவிட்டுள்ளார்.

ட்வீட் 2
ட்வீட் 1
ட்வீட் 1
ட்வீட் 2

அதன் தொடர்ச்சியாக வெளியிட்ட மற்றொரு ட்வீட்டில், ‘என்பதையே கீதையிலே கண்ணன் சொல்லுகிறான் "சாதுர்வர்ண்யம் மயாஸ்ருஷ்டம் குணகர்ம விபாகசஹ:

அதாவது படிப்பு, தொழில் அதன் அடிப்படையில் தான் நான் வர்ணங்களை உருவாக்கியிருக்கிறேன். பிறப்பின் அடிப்படையில் இல்லை. ஆகவே கீதையில் கண்ணன் சொன்ன தத்துவமும் வள்ளுவர் கூறியுள்ளதும் ஒன்றே..’ என்று பதிவிட்டுள்ளார்.

இதையும் படிங்க: இந்தி திணிப்புக்கு எதிராகப் பின்வாங்கிய திமுக: ட்விட்டரில் விமர்சித்த ஹெச். ராஜா!

Intro:Body:

H raja tweet reply to stalin

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.