ஆகஸ்ட் 22ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா வருகிறது. இதற்கு விநாயகர் சிலைகளை வைத்து கொண்டாட பாஜக, இந்து முன்னணி உள்ளிட்டவை தமிழ்நாடு அரசிடம் அனுமதி கேட்டன. ஆனால், தமிழ்நாடு அரசு இதற்கு அனுமதி அளிக்கவில்லை. இது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணை செய்த நீதிபதி, கரோனா வேகமாக பரவிவரும் சூழலில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட அளித்த முடியாது. மனுதாரர் மனுவை திரும்பப் பெறாவிட்டால், அபராதம் விதித்து தள்ளுபடி செய்ய நேரிடும் என தெரிவித்தார்.
இந்நிலையில், கர்நாடக அரசு அம்மாநிலத்தில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட அனுமதியளித்துள்ளது. இது குறித்து ட்விட்டரில் பதிவிட்ட பாஜக தேசியச் செயலாளர் எச். ராஜா, கர்நாடகாவில் விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்யவும் சதுர்த்தி கொண்டாடவும் அனுமதி. ஆண்மையுள்ள அரசு என குறிப்பிட்டுள்ளார். எச். ராஜாவின் இந்த ட்வீட்டை சிலர் ஆதரித்தும் விமர்சித்தும் வருகின்றனர்.
-
கர்நாடகாவில் விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்யவும் சதுர்த்தி கொண்டாடவும் அனுமதி. ஆண்மையுள்ள அரசு.
— H Raja (@HRajaBJP) August 19, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">கர்நாடகாவில் விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்யவும் சதுர்த்தி கொண்டாடவும் அனுமதி. ஆண்மையுள்ள அரசு.
— H Raja (@HRajaBJP) August 19, 2020கர்நாடகாவில் விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்யவும் சதுர்த்தி கொண்டாடவும் அனுமதி. ஆண்மையுள்ள அரசு.
— H Raja (@HRajaBJP) August 19, 2020