தூத்துக்குடி மாவட்டம், முத்தையாபுரத்தில் நேற்று திமுக சிறப்பு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட திமுக பொருளாளர் துரைமுருகன், “இதுமிகப்பெரிய வரலாற்று தேர்தல். நாடாளுமன்றத் தேர்தலிலும், இடைத்தேர்தலிலும் திமுக வெற்றி பெற்றால் ஸ்டாலின் அகில இந்திய அளவில் மிகப்பெரிய தலைவராக வரக்கூடிய நிலை இருக்கிறது. இன்னும் சொல்லப்போனால் 25 ஆண்டுகளில் இந்திய நாட்டின் ஜனாதிபதியாக வரக்கூடிய தகுதியும் மு.க.ஸ்டாலினுக்கு உள்ளது. அந்த அளவுக்கு அவருக்கு அரசியல் வேகம் இருக்கிறது” என்று பேசியிருந்தார்.
இந்நிலையில், துரைமுருகனின் பேச்சை கேலி செய்யும் விதமாக பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "நண்பர் துரைமுருகன் அவர்களுக்கு நகைச்சுவை உணர்வு அதிகம். ஆனால், அதற்காக இன்று 70 வயதைத் தொடும் ஸ்டாலின் 25 வருடம் கழித்து ஜனாதிபதி ஆவார் என்பது டூ மச்சா தெரியலை?" என பதிவிட்டுள்ளார்.