சென்னை வேப்பேரியில் உள்ள காவல் ஆணையர் அலுவலகத்திற்கு அனைத்திந்திய மாணவர் பெருமன்றத்தினர், அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தினர் பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா மீது புகார் அளிக்க வந்தனர்.
புகார் அளித்த பின் செய்தியாளர்களை சந்தித்த அனைத்திந்திய மாணவர் பெருமன்றத்தின் மாநில செயலாளர் தினேஷ், பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா கடந்த 20ஆம் தேதி நடந்த ஒரு போராட்டத்தின்போது குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக போராடும் மாணவர்கள் மீது குண்டு வீசுவோம் என பேசியது கண்டனத்திற்குரியது.
வன்முறையை தூண்டும் வகையிலான இந்த பேச்சை ஹெச்.ராஜா ஒவ்வொரு மேடையிலும் தொடர்ந்து பேசிவருகிறார். அரசியல் கட்சி தலைவர்கள் பலரையும் ஹெச்.ராஜா இழிவாக பேசிவருகிறார். தமிழ்நாடு அரசும், காவல் துறை இயக்குநரும் இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுத்து அச்சுறுத்தும் வகையில் பேசி வரும் ராஜாவை கைது செய்ய வேண்டும்” என்றார்.
இதையும் படிங்க: